ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

by Tamil2daynews
April 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

 

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது.
இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமான காணொளி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கின்றனர்.
இந்நிறுவனம் இதற்கு முன் ‘ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம் (தமிழ்), குருதிக்காலம் (தமிழ்),  இரு துருவம் (தமிழ்) உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம், தென்னிந்திய பொழுதுபோக்குத்துறை சந்தையில் மாறுபட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான வலுவான அர்ப்பணிப்புடன் பல்வேறு மொழிகளில் திரைப்படம் மற்றும் பிரத்யேக இணைய தொடர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் என்பது இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் அனிமேஷன் எனப்படும் சித்திர படங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஒரு முன்னணி நிறுவனம் மற்றும் படைப்புத்திறன் மிகு அரங்கத்தையும் கொண்டது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, பொழுதுபோக்கு துறையில் அனுபவசாலியான சமீர் நாயர் தலைமை ஏற்றிருக்கிறார். ‘ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்’ , ‘மித்யா’, கிரிமினல் ஜஸ்டிஸ் , ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’  போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டது.
‘உண்டேகி’, ‘பௌக்கால்’ என பலரின் பாராட்டுகளையும் பெற்ற படைப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா நடித்த திரைப்படமான ‘ஸ்விகாடோ’ சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. அபர்ணா சென் இயக்கிய ‘தி ரேப்பிஸ்ட்’, சமீபத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மதிப்புமிகு கிம் ஜிஜோக் விருதை வென்றது. தற்போது ‘சர்மாஜி கி பேட்டி’ மற்றும் ‘ ஜப் குலீ கிதாப்’ என பல படைப்புகளை திரையரங்கம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியிட கூடிய வகையில் தயாரித்து வருகிறது. மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- ‘நெட்ப்ளிக்ஸ்’, ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’, ‘அமேசான் பிரைம் வீடியோ’, ‘சோனி லைவ்’, ‘எம் எக்ஸ் பிளேயர்’, ‘ஜீ 5 ‘மற்றும் ‘வூத் செலக்ட்’ போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஆக்கபூர்வமான கூட்டணியை அமைத்துள்ளது.
TheatreLove: I embarrassed my parents while watching Thenali, says Ashok Selvan | Tamil Movie News - Times of India
எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி
எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி ஒரு ஸ்டார்ட் அப் புரொடக்ஷன் ஸ்டூடியோ. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஒரு முதலீட்டு வங்கியாளருடன் கடந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், நம்ப முடியாத அளவிற்கு ஆக்கபூர்வமான தொழில் முனைவோராக இதன் தலைவரான சந்தீப் மெஹ்ரா உயர்ந்திருக்கிறார். அவரது தலைமையின் கீழ் இந்நிறுவனம் சிண்டிகேஷன் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்புக்கான மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பல மொழிகளிலான உள்ளடக்கத்துடன் கூடிய தயாரிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்நிறுவனம் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் போன்ற ஸ்டுடியோக்களுடன் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் பரிபூரணமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் எல்எல்பி
தென்னிந்திய திரை உலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் பயணித்து வரும் முகேஷ் மேத்தா, அனில் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘நார்த் 24’, ‘காதம்’ போன்ற படங்களின் உள்ளடக்க விசயங்களில் சாதனை படைத்த சி. வி. சாரதியுடன் இணைந்து செயல்படும் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றிருக்கிறது. துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தய்யார் இயக்கிய ‘NAPKCB’, பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த ‘கோதா’, மலையாளத்தில் ஜெய் கிரிஷ் இயக்கத்தில் பிருதிவிராஜ் சுகுமாரன் நடித்த ‘எஸ்ரா’ மற்றும் தமிழில் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமான ‘ஆதித்யா வர்மா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.
Previous Post

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

Next Post

ZEE5 தளத்தின் “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post

ZEE5 தளத்தின் “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Popular News

  • ‘பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்

    ‘பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையம் கொண்டு பிரமாண்ட ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..”

“ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..”

June 8, 2023

LIGHT HOUSE MEDIA நிறுவனம், SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் ‘முகை’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

June 8, 2023

டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!

June 8, 2023

விருதுகளை அள்ளிய விக்ரம் சுகுமாரனின் ‘இராவணகோட்டம்’..!

June 8, 2023

படப்பிடிப்பில் மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய ‘ஃ’ பட ஹீரோவும் இயக்குநரும்

June 8, 2023

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

June 8, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!