• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை..

by Tamil2daynews
June 17, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை..

 

இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல் ஹாசன்   கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார். சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறது என நெகிழ்ந்து இக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார்.
கமல் ஹாசன் அவர்களின் பதில் கவிதை:
இக்குருட்டுத் தாத்தாவின்
கண்ணுடைப் பேரன்
கல்வியாளன் அல்ல.
கவியை ஊன்றி நடக்கும்
என்னிளம் பேரா
என்றேனும் பள்ளி செல்ல மறக்காதே
அல்லேல் என்போலே அலைவாய்.
கமல்ஹாசன்.
இப்படி கமல்ஹாசன் அவர்களின் பதில் கவிதை எழுதத்தூண்டிய சீனு ராமசாமியின் கவிதை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
குரு சங்கரன்
………………………
இன்னும் வராது
பள்ளிக்கு போன
சங்கரனை தேடுகிறார்
சங்கரன் தாத்தா.
வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
மாலை வெயிலில் அலைகிறார்
விரல் தடுக்காமல்
பாதங்களை ஊன்றிப் பார்க்கிறார்.
நடக்கமுடியாது
“சங்கரா சங்கரா
இருட்டுதுடா
தாத்தாவுக்கு
கண் தெரியலடா”.
இருள் கவியும்
ஓசைக்கிடையில்
எங்கிருந்தோ
ஓடி வந்தான் சங்கரன்.
“தாத்தா சேவல் சுருட்டு வாங்கிட்டு வர்றேன்
நீ எதுக்கு வந்த” என்றான்.
“இதுக்கா பெரிய ரோட்டத் தாண்டிப் போன ஏய்யா?
“நீ போவியே
அப்புறம் நா தேடுவனே”
“நீ தேடுவயா..
அப்பாடி..
வேணாம்பா
வா..”
தேடி வருபவரிடம்
தேடி வருவது போலொரு அன்பு
சங்கரன் விரல் பற்றி நடந்த சங்கரன் தாத்தா அவனின் வாத்தியார் போல முழுப்பெயர் சொன்னார்.
“அலைய விட்டுடயே
குருசங்கரசாமி
பாத்துவா”
“நீ பாத்துவா தாத்தா”
என்றான்
சங்கர தாத்தாவின்
பேரன்
சங்கரன்.
சீனு ராமசாமி.
Previous Post

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும் ‘VD12’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

Next Post

”ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” ; 2018 வெற்றிப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்

Next Post

”ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” ; 2018 வெற்றிப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

    0 shares
    Share 0 Tweet 0
  • EXAM – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.