• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

by Tamil2daynews
May 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

 

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார். .
யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே “SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மே-30ஆம் தேதி ரெஜினா படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொள்கிறார். மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் திரு. எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு பிரபல விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
சித் ஸ்ரீராம், சின்மயி, வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பாடகர்களுடன் நடிகை ரம்யா நம்பீசனும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
பாடல்களை தமிழில் யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R , தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ), மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.
ரெஜினா படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
Previous Post

தீராக்காதல் – விமர்சனம்

Next Post

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Next Post

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Popular News

  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

    0 shares
    Share 0 Tweet 0
  • வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் ‘Production no : 2’ திரைப்படம், 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் அவர்களால் இயக்கப்படுகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.