மம்முட்டிக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்த கிறிஸ்டோபர்!
இயக்குனர் பி.உதயகிருஷ்ணா இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் ‘கிறிஸ்டோபர்’. இதில்
அமலா பால், சினேகா, ஐஸ்வர்யா லட்சுமி, வினய் ராய், ரம்யா சுரேஷ், நிதின் தாமஸ் உள்ளிட்ட அனைவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் நடிகர் வினய் ராய் மலையாள சினிமாவில் அறிமுகமான படம் இது, மேலும் அவர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக வெளியாகியுள்ளது.
பெண்கள் சம்பந்தப்பட்ட தொடர் குற்றங்களை விசாரிக்கும் ஒரு போலீசாக மம்முட்டி அசத்தியுள்ளார். தான் எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை மீண்டும் இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். குறிப்பாக பெண்கள் மீது கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் மீது வரும் கோபம் அவரை மிகவும் பொறுமையிழக்கச் செய்கிறது. பலர் அவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினாலும், தொடர்ந்து அவர் செய்யும் என்கவுண்டரால் பணி நீக்கமும் செய்யப்படுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் அமலா பால் நன்றாக நடித்துள்ளார்.மம்முட்டியின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது. விக்ரம் படத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற ஏஜென்ட் ‘டீனா’ இப்படத்திலும் ஒரு காட்சியில் வலம் வந்தார். Slow motion இல் வரும் காட்சிகள் அதற்கு ஏற்ற பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. இப்படம் non – linear முறைப்படி திரைக்கதை சொல்லப்பட்டதால் ஒவ்வொரு காட்சிகளுமே சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது, இறுதி வரை அடுத்து என்ன நடக்குமோ என்பதை பரபரப்பாகவே வைத்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவு காட்சிகள் சிறப்பு. மீண்டும் ஒரு சிறப்பான கதையை தேர்வு செய்து நடித்துள்ளார் மம்முட்டி.









