• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அசத்தல் ரீமிக்ஸ் ஆக வெளியான காபி வித் காதல் பர்ஸ்ட் சிங்கிள்

by Tamil2daynews
July 2, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அசத்தல் ரீமிக்ஸ் ஆக வெளியான காபி வித் காதல் பர்ஸ்ட் சிங்கிள்

 

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக சுந்தர்.சி யின் டைரக்ஷனில் வெளியான  அரண்மனை 3 ஹாரர் த்ரில்லராக ரசிகர்களை மிரட்டியது என்றால் குடும்பப்பாங்கான காதல் கதையாக கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி உள்ளது இந்த காபி வித் காதல்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
எப்போதுமே இயக்குனர் சுந்தர்.சியின் படங்களில் நிச்சயமாக கலகலப்பான குடும்ப நடனப்பாடல் ஒன்று தவறாமல் இடம் பெறுவது வழக்கம். அதிலும் பழைய படங்களில் ஹிட்டான பாடல்களை அழகாக ரீமிக்ஸ் செய்து, அதற்கு படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் நடனம் ஆட வைத்து படம் ஆக்குவதில் சுந்தர் சி வித்தகர்.

இதற்கு முன்னதாக ஆம்பள படத்தில் இன்பம் கொஞ்சும் வெண்ணிலா வீசுதே, வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் வாங்க மச்சான் வாங்க ஆகிய சூப்பர் ஹிட் பாடல்களை இந்தக்கால இளைஞர்களும் ரசிக்கும் விதமாக குடும்ப நடன பாடலாக அழகாக படமாக்கி  இருப்பார் சுந்தர்.சி.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள காபி வித் காதல் படத்திலும் அப்படி ஒரு சூப்பர் ஹிட் பாடல் குடும்ப நடன பாடலாக இடம் பெற்றுள்ளது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலும் குஷ்புவும் இணைந்து நடித்த எஸ்பிபியும் சித்ராவும் இணைந்து பாடிய “ரம்பம் பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்” என்கிற பாடல் இந்த படத்தில் இடம்பெறுகிறது. படத்தில் நடித்த நட்சத்திரங்களும் இந்த பாடலுக்கு ஆடிப்பாடுவதாக இந்த நடனம் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை

நடிகர்கள்
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்திதொழில்நுட்பக்குழு
எழுத்து ,இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர் C , ACS அருண் குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு- E.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர்
கலை -குருராஜ். B
நடனம் -ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா
சண்டை பயிற்சி -தளபதி தினேஷ்
நிர்வாக தயாரிப்பு- பாலா கோபி
Previous Post

“ராக்கெட்ரி” விமர்சனம்.

Next Post

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் & அஞ்சு குரியன் நடிப்பில், Think Originals’ உடைய “வாடி வாடி” வீடியோ பாடல், வெளியானது!!!

Next Post

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் & அஞ்சு குரியன் நடிப்பில், Think Originals’ உடைய “வாடி வாடி” வீடியோ பாடல், வெளியானது!!!

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.