• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பூஜையுடன் துவங்கியது R.K.சுரேஷ் படப்பிடிப்பு

by Tamil2daynews
October 6, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பூஜையுடன் துவங்கியது R.K.சுரேஷ் படப்பிடிப்பு

வில்லேஜ் ஸ்டுடியோஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் C.முருகன் அன்னை  K.செந்தில்குமார் இருவரும் இணைந்து   மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ” குளவி ” என்று பெயரிட்டுள்ளனர்.

வில்லன் கதாபாத்திரமானாலும் சரி நாயகன் கதாபாத்திரமானாலும் சரி எந்த கதாபாத்திரமானாலும் தனது அசாத்திய நடிப்பால் இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள R.K. சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சசிகுமார் ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த அமீரா வர்மா நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிஸ்தா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயன் முனுசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த யதார்த்த இசையமைப்பாளர் N.R. ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் V.S.செல்வதுரை கூறியதாவது…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். அந்த மக்களின் கலாச்சாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம். குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்ல இருக்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் முக்கியத்துவம் எப்படி இருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு  கையாள வேண்டும் என்பதை சொல்லும் படம் இது.

நகைச்சுவையுடன் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை பற்றிய படமாக இதை கொடுக்க இருக்கிறோம்.

படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்றார் இயக்குனர் V.S. செல்வதுரை.

பாடல்கள் –  கபிலன், மோகன்ராஜ்
எடிட்டிங் – மு. காசிவிஸ்வநாதன்.
நடனம் – ராதிகா, சக்தி ராஜு.
ஸ்டண்ட் – ஹரி முருகன், ஷங்கர்
நிர்வாக தயாரிப்பு – நிமல்
தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – C. முருகன், அன்னை K. செந்தில் குமார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – V.S.செல்வதுரை.

இவர் எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குனர்கள் A.R.முருகதாஸ் , சித்து ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு ஏராளமான படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

சத்ரபதி சிவராயாவின் மஹாமந்த்ரா தென்னிந்தியாவிலும் கொடி நாட்ட வருகிறது

Next Post

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட, சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

Next Post

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட, சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

Popular News

  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லீடர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆர் பி எம் ‘ ( R P M )படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.