• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

by Tamil2daynews
January 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகை பவானி ஸ்ரீ,  தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

 விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர்.

அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக,  ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின் preview காட்சிகளும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்கான திரையிடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது புத்துணர்ச்சியான திரைத் தோற்றமும் சிறப்பான நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட பவானி ஸ்ரீ கூறும் பொழுது,
“தீவிரமான மற்றும் சீரியஸ் ஆன படங்களில் நடித்த பிறகு, ஹாட்ஸ்பாட் 2 எனக்கு ஒரு இனிய மாற்றமாக இருந்தது. இது வேடிக்கையான light hearted படமாக, Gen Z தலைமுறையின் நவீன உறவுகளை சிறு ஃபேண்டசி கலந்த அணுகுமுறையுடன் ஆராய்கிறது. இதுவே கதையை மிகவும் புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்புகளை நான் நீண்ட காலமாக ரசித்து வருகிறேன் — திட்டம் இரண்டு, பிளான் B முதல்..துணிச்சலான மற்றும் வித்தியாசமான கதையாக்கத்தால் தனித்துவமாகத் திகழ்ந்த ஹாட்ஸ்பாட் முதல் பாகம் வரை…

 ஹாட்ஸ்பாட் 2-வில் நடிக்க அவர் அழைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அஷ்வினுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் திருப்திகரமாக இருந்தது. உலகளாவிய வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இனிமேலும் புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.”

ஹாட்ஸ்பாட் 2 மூலம், அர்த்தமுள்ள சினிமாவுக்கான தனது அர்ப்பணிப்பை பவானி ஸ்ரீ மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, நடிகையாக தனது பலதிறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால், இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
Previous Post

‘மான சங்கர வர பிரசாத்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி

Next Post

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

Next Post

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.