• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

by Tamil2daynews
March 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

 

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.

இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான  இசையில்,  ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள  ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.

‘ஜமா’  திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.

மேலும், சூப் பாயின்   மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.

இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது.

இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட  பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Link :  https://www.youtube.com/watch?v=2Sz1o1NqKL4
Previous Post

இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

Next Post

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.