• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தீபாவளி வெளியீட்டிற்காக விறுவிறுப்புடன் தயாராகும் சிலம்பரசன் TR ன் ‘அரசன்’

by Tamil2daynews
May 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தீபாவளி வெளியீட்டிற்காக விறுவிறுப்புடன் தயாராகும் சிலம்பரசன் TR ன் ‘அரசன்’

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் – எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன் , இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி, கிஷோர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று, விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன் TR-   பிரியங்கா மோகன் – சமுத்திரக்கனி –  ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோர் கதையின் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையின் புறநகர்  பகுதியான கிழக்கு கடற்கரை சாலி ஒட்டிய கிராமப் பகுதி ஒன்றில் பிரம்மாண்டமான திறந்த வெளி அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அரங்கம்-  வடசென்னையை அப்படியே முழுவதுமாக  ரீகிரியேட் செய்து தத்துரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திற்காக அமைக்கப்பட்ட ‘தாராவி’ அரங்கத்தை விட நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும்  இந்த அரங்கத்தை பார்த்தவர்கள் சிலாகித்து பேச  ஆரம்பித்துள்ளனர்.. இந்த அரங்கம் பிரம்மாண்டமான பொருட்செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது..

மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த அமீர் மற்றும் சந்திராவாக நடித்த ஆண்ட்ரியாவும் கலந்து கொள்கிறார்.‌

இன்னும் மூன்று மாதத்திற்குள் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு பெறும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ் சினிமாவில் தயாராகி வரும் திரைப்படம் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ என்பதும், இப்படத்தின் பிரத்யேக ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்பதும், தீபாவளி போன்ற திருவிழா தருணத்தில் ‘அரசன்’ திரைப்படம் வெளியானால்.. வணிக ரீதியான பெரும் வெற்றியை பெற கூடும் என சிலம்பரசனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதும் , இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post

“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!

Next Post

திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது

Next Post

திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.