• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு

by Tamil2daynews
March 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு

 

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘ பள்ளிச்சட்டம்பி ‘படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து ‘பள்ளிச்சட்டம்பி’ மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.

இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடிஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.
Image‘பள்ளிச்சட்டம்பி’ டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான ‘குயின்’, ‘ஜன கண மன’ மற்றும் ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ‘ஜன கண மன ‘ திரைப்படத்தை பாராட்டியது… பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) – பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம்

 ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
Previous Post

“கெணத்த காணோம்” — உணர்ச்சிப்பூர்வமான வெற்றி: யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

Next Post

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

Next Post

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான 'ரோர் 26' (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.