• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

by Tamil2daynews
March 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

 

வடசென்னை லவ் & காமெடி களேபரம் – ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் ட்ரெண்டிங்!

பெரம்பூர் பின்னணியில் பரபரக்கும் காதல் கதை – ‘அன்பே டயானா’டைட்டில் டீசர் வெளியீடு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் அசத்தலான டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில்

தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.

பக்கா லோக்கலாக “வட சென்னையின் கெத்து வியாசர்படி… இல்லை இல்லை பெரம்பூர்!” என ஆச்சரியமளிக்கும் வகையில் ஆரம்பிக்கும் டீசர், இதுவரை திரையில் பெரிதாக பார்க்காத சென்னையின் ஒரு புதுமுகத்தை காட்டுகிறது.

அத்தோடு வடசென்னை மிடில்கிளாஸ் இளைஞனின் அதிரிபுதிரியான குடும்பத்தை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துகிறது. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், வெளியில் பக்கா லோக்கல் கெத்து – இந்த இரட்டை உலகத்தையும் டீசர் நகைச்சுவை கலந்த பரபரப்புடன் காட்டுகிறது.
Imageஇப்படியான சூழலில், அந்த இளைஞன் ஒரு ஆங்கிலோ-இந்தியன் பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறைகள் என பல்வேறு வேறுபாடுகள் மோதும் போது உருவாகும் சம்பவங்கள் களேபரமாக வெடிக்கின்றன. காதலும், குடும்பமும், கெத்தும், காமெடியும் கலந்து நகரும் இந்த பரபரப்பான காட்சிகள், “அடுத்து என்ன ஆகும்?” என்ற எதிர்பார்ப்பை தூண்டி படம் பார்க்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா  நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டில் டீசர்மூலம் ரசிகர்களின் கவனத்தை வெற்றிகரமாக ஈர்த்துள்ள ‘அன்பே டயானா’, வரும் கோடை காலத்தில்,  குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான என்டர்டெய்னராக அமையும்.

https://youtu.be/lf1RiFkZG18?si=ekHDJrb-TjvakxS5

Previous Post

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

Next Post

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Next Post

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.