• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

by Tamil2daynews
March 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன் அவர்கள் பேசும்போது, ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக எடுத்து விட்டோம்.  மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.

இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் அவர்கள் பேசும்போது, இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக இருந்தார், என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் மிகவும் எளிதாக அமைந்தது. இந்த படத்தில் பணி புரிந்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.
தயாரிப்பாளர் ஆனந்த் ஷா அவர்கள் பேசும்போது, இயக்குனர் விஜய் முதல் முறையாக இந்த கதையை எடுத்துக் கொண்டு வந்த போது இது போன்ற ஒரு கதையை நான் பார்த்ததே இல்லை. மிகவும் சிம்பிளான ஒரு ஸ்டோரி, மிகவும் சிம்பிளிசிட்டியான ஒரு மனிதர். பொதுவாக இயக்குனர்கள் முதல் படம் பண்ணும் போது பிரம்மாண்டமாக எடுக்க முயற்சிப்பார்கள், அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். ஆனால் விஜய் நல்ல ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த படத்தை எடுத்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்திற்காக மும்பையில் அலுவலகம் போடலாம் என்று சொன்னேன், ஆனால் இயக்குனர் அந்த செலவை படத்திற்குள் போடலாம் என்று சொன்னார். நன்றி.

தயாரிப்பாளர் வெங்கி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு சினிமா விழாவில் பேசுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் விஜய் என்னிடம் இந்த கதையை சொன்னார். ஆனால் எதற்காக என்னிடம் சொன்னார் என்று புரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு இன்வெஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று சொன்னேன். பிறகு நான் தான் தயாரிப்பாளர் என்று சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார். இந்தப் படத்திற்காக 35 வீடுகளை தேடினார். அதில் ஒரு வீட்டை தேர்வு செய்தார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் படம் எடுப்பதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, பிறகு அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். விஜய் இடமிருந்து கால் வந்தால் ஏதாவது பெரிய பிரச்சினையாக மட்டும் தான் இருக்கும். விஜய் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பிற்காக நிச்சயம் இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் அத்துல் அவர்கள் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். இயக்குனர் விஜய் அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இந்த படத்தில் இல்லை. கதையை முழுவதுமாக படித்தேன். சிறப்பாக இருந்தது. இதில் எப்படியாவது நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது. இந்த படத்தில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் செம ஜாலியாக இருந்தது. நிவேதிதா நல்ல ஒரு நடிப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும். நாசர் சார் அவர்களுடன் நடித்தது எனக்கு பெருமையாக இருந்தது. டெக்னிகல் டீம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்கு என்ன தேவையே அதனை சரியாக கொடுத்துள்ளனர். மார்ச் 6ம் தேதி அனைவரும் இந்த படத்தை பார்த்து சப்போர்ட் செய்ய வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
நடிகர் சிபி சந்திரன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இது போன்ற மேடை கிடைப்பது நல்ல ஒரு வாய்ப்பு. நிறைய அலுவலகங்களில் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த படத்தில் எங்கள் டீமே சிறப்பாக அமைந்துள்ளது. ரிலேஷன்ஷிப் என்றாலே த்ரில்லர் தான். நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது நம்முடைய பார்ட்னரிடம் சில விஷயங்களை மறைத்திருப்போம். அனைவரும் இதனை செய்திருப்போம். யாரும் நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. அப்படி மறைக்கும் போது நமக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். மர்டர் மிஸ்டரி படங்களை விட ரிலேஷன்சிப்பில் இருக்கும் திரில்லர் எதிலுமே வராது. இந்தப் படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் த்ரில்லரை பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறது. இன்று விவாகரத்து தொடர்பான செய்திகள் தான் அதிகம் இடம் பெறுகிறது.

ஒருவர் நம்மிடமிருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காக தான் ஒரு விஷயத்தை மறைக்கிறோம். அவர்கள் தேவையே இல்லை என்று நினைத்தால் அனைத்தையும் ஓப்பனாக சொல்லி விடுவோம். சினிமா துறையில் விவாகரத்து தொடர்பான செய்திகள் அதிகம் வருகிறது. ஒருவருக்கு மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம்.. விஜய் சார், அஜித் சார் போன்றவர்களுக்கு வருடத்தில் 150 நாட்கள் தான் வேலை இருக்கும். மீதமுள்ள நாட்களில் வீட்டில் தான் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் நமது குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது பழைய ரிலேஷன்ஷிப்பை பற்றி பேசவே கூடாது. அதை கடந்து போய்விட வேண்டும். உங்களுடைய தட்டில் இருக்கும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது, அதேபோல இன்னொருவர் தட்டில் அதிகம் சாப்பாடு இருந்தால் அதை அவர் சாப்பிட போகிறார்.  நம்மளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த படம் இந்த சமயத்திற்கு ஏற்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குனர் சொல்ல வந்த கருத்தை உண்மையாக இருக்கும். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். எனக்கு பலமுறை சப்போர்ட் செய்துள்ளீர்கள். இந்த படத்திற்கும் சப்போர்ட் செய்யுங்கள். நன்றி
நடிகை நிவேதிதா சதீஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் இருப்பது மிகவும் எமோஷனலாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது.

படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் விஜய் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது. இந்தப் படம் ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்தது. இந்த படத்திற்கு அனைவரும் சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் நல்ல ஒரு ஓர்க்கை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இந்த படம் சிங் சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் நன்றி.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ரங்கநாதன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவிற்கு வந்து 7,8 வருடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும் சினிமா பக்தர்கள். அதிலிருந்து எனக்கு ஈடுபாடு வந்தது. சினிமாவில் ஏதாவது தனித்துவமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நிறைய காலம் எடுத்துக் கொண்டேன். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினாலும், மீண்டும் ஒரு எழுத்தாளருடன் இணைந்து எழுதினேன். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை தேடி அலைந்தோம். இந்த படம் ஏற்கனவே உள்ள பேட்டன்களில் இல்லை என்பதை உணர்ந்தோம். முன்னணி நிறுவனங்களிடம் இந்த கதையை எடுத்துக் கொண்டு சென்ற போது இந்த படத்திற்கான ரெஃபரன்ஸ் இல்லை. நண்பர்கள் இந்த படத்திற்காக அவர்களால் முடிந்த இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர்.
சினிமாவில் இண்ட்ரஸ்ட் உள்ளவர்களிடம் இந்த கதையை கொண்டு சென்றோம், அப்படி உள்ளே வந்தவர்கள் தான் எங்களது தயாரிப்பாளர்கள். அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த கதை தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்த படத்தை முதலில் இருந்தே சிங்க் சவுண்டில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் கண்டிப்பாக தமிழ் பேச தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அப்படித்தான் நிவேதிதா இந்த படத்திற்கு வந்தார்கள். நிறைய பேரை இந்த கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிவேதிதா எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். நாசர் சாருக்கு எங்கள் படத்தின் ஐடியா பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். லட்சுமி பிரியா இந்த கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார்கள். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒர்க்கை கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முக்கியமான ஒருவராக மாறி உள்ளார். இந்த படம் ஒரு யுனிக் அட்டெம்ப்ட். மார்ச் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. உங்களது சப்போர்ட் தேவை. நன்றி.

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள்

நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம்: விஜய் ரங்கநாதன்
தயாரிப்பாளர்கள்: வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல்
தயாரிப்பு நிறுவனங்கள்: ஆன்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ்
இசை: வைசாக் சோமநாத்
ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன்
படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்
கலை இயக்கம்: சரண்யா ரவிச்சந்திரன்
ஆடை வடிவமைப்பு: டீனா ரோசரியோ
பாடல்கள்: கார்த்திக் நேத்தா, விஜய் ரங்கநாதன், விக்னேஷ் ஸ்ரீகாந்த்
வி.எஃப்.எக்ஸ்: செலிப்ரேஷன் ஆஃப் லைஃப்
லைன் புரொடியூசர்: நோயல் ஆண்டோன்
கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: பீட்ரூட் (BeatRoute)
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: பரணிதரன்

Previous Post

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

Next Post

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

Next Post

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.