“விசித்திரன்” விமர்சனம்
ஒரு விநியோகஸ்தராக,ஒரு தயாரிப்பாளராக, பிறகு நடிகராக முன்னேறிய ஆர்கே சுரேஷ் இந்தப் படத்துக்காக தனது உடல் வாக்கினை மிகுந்த கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார் என்பது அவரது தோற்றத்தில் நன்கு தெரிகிறது.
மலையாளத்தில் பார்த்த இதே படத்தை தமிழில் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் தந்திருப்பது இயக்குனருக்கு முதலில் ஒரு சபாஷ்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்வுபூர்வமான முறையில் வெளிப்படுத்தி இருக்க கூடிய படம் விசித்திரன் .

கொலை வழக்கு விசாரணையின் போது, படித்து முடித்துவிட்டு கிராமத்தில் வசிக்கும் போது காதலித்த காதலியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் இருக்கும் நேரங்களில் ஒவ்வொரு நிமிடமும் தனது பழைய காதலியின் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். இதனால் கணவன் மனைவி உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்படுகிறது. அதன் பிறகு தனது மனைவி பிரிந்து சென்றுவிடுகிறார் சில வருடங்களுக்கு பிறகு வேறொரு கணவரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.

இன்றைய காலகட்டத்தில் எளியவர்களின் உயிரோடு விளையாடும் கார்பரேட் மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடைபெறும் முறைகேடுகளை வெளிக்கொண்டுவர போராடிவரும் ஆர் கே சுரேஷ் வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை.
தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட அது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக மிரட்டியிருக்கிறார் ஆர்கே சுரேஷ். ஆர்கே சுரேஷ் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களைவிட இந்த படம் ஆர்கே சுரேஷுக்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆர்கே சுரேஷ் இதுவரை நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான படம் .
நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்கள் உங்களுக்கு நல்ல அந்தஸ்தை இனிமேல் தருவார்கள் என்பது சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் கிடைத்த படத்தையெல்லாம் வாரிப் போட்டுக் கொள்ளாமல் இது மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடித்தால் மட்டுமே உங்களுக்கு தமிழ் சினிமாவில் தக்க இடம் கிடைக்கும் . தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடிப்பீர்கள்.
வாழ்த்துக்கள் ஆர்.கே .சுரேஷ்.
இயற்கையான வாழ்க்கைகள் மாறி செயற்கையான வாழ்வை இந்த தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த “விசித்திரன்” வித்தியாசமானவன்.