• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சமந்தா நடிப்பில் யசோதா படத்தின் அசரவைக்கும் முதல் காட்சித்துணுக்கு !

by Tamil2daynews
May 7, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சமந்தா நடிப்பில் யசோதா படத்தின் அசரவைக்கும் முதல் காட்சித்துணுக்கு !

யசோதா கண் விழிக்கிறாள்,  இதுவரையிலான அவளது உலகம்  இனி இல்லை. அவளது சூழல், அவளது உடை, அவளது காலம் மற்றும் பேரமைதி அனைத்தும் ஆச்சர்யாமாக முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. அவளது இதயதுடிப்பின் சத்தம் அவள் காதை கிழிக்கும் நேரத்தில் அவள் ஜன்னல் கதவை திறக்கிறாள் அங்கு ஒரு புறா அவள் வேண்டும் சுதந்திரத்தை சுவாசிக்கிறது. அவள் அதை பிடிக்க நினைக்கிறாள் என்ன நடந்தது ?

மேல் கண்ட அனைத்தும் ‘யசோதா’ முதல் பார்வையில் இடம்பெற்றுள்ளவை. இந்த காட்சித்துணுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், படத்தில் இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்கிறார்.

Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சமந்தா நாயகியாக நடிக்கும் ‘யசோதா’ படத்தை தங்களின் 14வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது. திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படத்தின் முதல் பார்வை இன்று வெளியான நிலையில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், “சமந்தா ‘பேமிலி மேன் 2’ வெப்சீரிஸ் மூலம் பான்-இந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவரது வளர்ச்சியை மனதில் வைத்து, இந்த படத்தை சமரசமின்றி உருவாக்குகியுள்ளோம். சமந்தா தனது பாத்திரத்தை வெளிப்படுத்திய விதம், அவரது அர்பணிப்பு மிகவும் பாராட்டபடவேண்டியது .அவரது நடிப்பை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஏப்ரலில் சண்டை பயிற்சியாளர் வெங்கட் மேற்பார்வையில் கிளைமாக்ஸ் பகுதியை கொடைக்கானலில் படமாக்கினோம். ஏற்கனவே 80% படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜூன் 1வது வாரம் வரை படப்பிடிப்பு நடைபெறும். ஸ்பெஷல் எஃபெக்ட்களும் இந்தப் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எங்களின் இயக்குநர் ஹரி-ஹரிஷின் பணி பிரமிக்க வைக்கிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இசை: மணிசர்மா,
வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி
பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி ஒளிப்பதிவு: M.சுகுமார்
கலை: அசோக்
சண்டைகள்: வெங்கட்
எடிட்டர்: மார்த்தாண்டன், K.வெங்கடேஷ் லைன் புரடியூசர்: வித்யா சிவலெங்கா
இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி
இயக்கம்: ஹரி – ஹரிஷ்
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்
பேனர்: Sridevi Movies

Previous Post

“விசித்திரன்” விமர்சனம்

Next Post

நடிகை ஷிவானி ராஜசேகர் ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று, ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் ! .

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

நடிகை ஷிவானி ராஜசேகர் ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று, ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் ! .

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.