ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கடின உழைப்பால் கவனம் ஈர்க்கும் நடிகர் அஜித் கோஷி.!

by Tamil2daynews
February 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கடின உழைப்பால் கவனம் ஈர்க்கும் நடிகர் அஜித் கோஷி.!
பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி மனதை ஈர்க்கும்படியான நடிப்பை தருபவர். ஹீரோயின் அப்பா, போலீஸ் கமிஷ்னர் என இவரது முகம் மனதிற்குள் பச்செக்கென ஒட்டிக்கொண்ட முகம். ஓடிடி பான் இந்தியா என வளர்ந்திருக்கும் திரைத்துறையில் இப்போது இவரது திரைப்பயணம்  வெற்றிப்பாதை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.
தன் நடிப்பால் கவனம் ஈர்க்கும் நடிகர் அஜித் கோஷி பற்றி..
உங்களை பற்றி.. 
“நான் பிறந்தது கேரளாவில், ஆனால் வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னை தான். பக்கா ராயபுர வாசி.
நான் குடும்பத்துடன் ராயபுரத்தில் வசித்து வருகிறேன். சினிமா ஆர்வம் என் இளைமைப்பருவத்தில் இருந்தே எனக்கு
பள்ளி, கல்லூரிகளிலயே மேடை ஏறி நடிப்பது, நாடகம் போடுவது என நடிப்பின் மீது தீராத ஆர்வத்துடன் இருந்தேன்.  அப்பொழுதே எனக்கு நடிப்பு துறையில் ஒரு ஆர்வம் இருந்தது, ஆனால் அப்போது என்னால் முழு வீச்சுடன் நடிப்பு துறைக்குள் இறங்க முடியவில்லை. அதற்கான வாய்ப்புகள் அப்போது கிடைக்கவில்லை. பின்னர் 45 வயதுக்கு பிறகு, ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என மனதில் தோன்றிய எண்ணத்தில் தான் தீவிரமாக நடிகராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து இறங்கிவிட்டேன். இப்போது 35 படங்கள், 40 விளம்பரங்கள், 5 வெப் சீரிஸ்கள் என தொடர்ந்து எனது திரைப்பயணம் சிறப்பாக போய்கொண்டு இருக்கிறது.
ajit koshy (@ajitkoshy) / Twitter
நடிக்க வருவதற்கு முன்..
நடிக்க வருவதற்கு முன் நான் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் ரூஃப்  இன்ஸ்டாலிங்க் செய்து வந்தேன், சில காலம் துபாயில் தொழில் செய்து கொண்டு இருந்தேன், 2010-க்கு பிறகு தான் நான் தமிழ்நாட்டிற்கு வந்தேன், பின்னர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துவிட்டேன்.  ஆனால் நடிகராக வேண்டும் என்ற எண்ணம் தான் என்னை இங்கு இழுத்து வந்துவிட்டது.  ரிஸ்க் எல்லா இடத்திலும் இருக்க தான் செய்கிறது. நடிகராக நான் இங்கு தொடர்ந்து இயங்கி கொண்டு இருப்பதிலும் ரிஸ்க் இருக்க தான் செய்கிறது. ஆனால் நாம் ரிஸ்க் எடுதது தான் ஆக வேண்டும்.
நீங்கள் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறீர்கள்..!?
அது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் இதில் ஒரு ஸ்ட்ரீயோடைப் செய்கிறார்கள். எதாவது ஒரு படத்தில் போலீஸ் கதாபாத்திரம், கமிஷ்னர் கதாபாத்திரம் வேண்டுமென்றால் அஜித் கோஷியெய் அழைக்கலாம் என்று முடிவெடுத்துவிடுவார்கள். எனக்கு தெரிந்து எனது பெயரையே கமிஷ்னர் அஜித் கோஷி என்றுதான் டெக்னீஷியன் சிலர் அவர்களது செல்லில் வைத்துள்ளார்கள்.
ஒரு கமிஷ்னர் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து அவர்கள் என்னை அணுகுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு வரும் கதாபாத்திரங்களை  தொடர்ந்து நான் மறுக்காமல் செய்து வருகிறேன். நிறைய கதாபாத்திரங்கள் செய்த பின்னர், பலர் என்னை பார்த்து எனக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க வாய்ப்பு இருக்கிறது, அதனால் நான் தொடர்ந்து இயங்கி வருகிறேன். வேஷ்டியெய் மடித்து கட்டி கிராமத்து வேடங்களில் நடிக்க ஆசை.
நீங்கள் இதுவரை பண்ண கதாபாத்திரங்களில் உங்களுக்கு நெருக்கமாக அமைந்த கதாபாத்திரம்..
நந்தா சார் முன்னணி நாயகனாக நடித்த இருதுருவம் வெப் தொடரில்  ஒரு வில்லன் கதாபாத்திரம் செய்து இருந்தேன், அது எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. அந்த தொடரின் இரண்டாவது சீசன் இப்போது விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு விஷால் சார் உடைய ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தில் நடித்து இருந்தேன், அதில் எனது கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும்படி  இருந்தது. அதன் பிறகு உலகம் முழுவதும் பலமொழிகளில் வெளியாகி மிகபெரிய வெற்றிபெற்ற சுழல் தொடரிலும் நான் நடித்து இருந்தேன், அந்த தொடர் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அந்த தொடரை பார்த்து எனக்கு நிறைய இந்தி தொடர்களில் இருந்தும் வாய்ப்பு வந்தது.  அதற்கு புஷ்கர் காயத்ரிக்கு தான் நன்றி கூற  வேண்டும்.
Ajith Koshy - IMDb
என்ன மாதிரியான  கதாபாத்திரங்கள் செய்ய ஆசை??
எல்லா நடிகர்களுக்கும், பலமும் இருக்கும் பலவீனமும் இருக்கும். எனது பலம் முதலில் எனது பலமான உடல்மொழியும் உருவமும். அதனால் ஒரு ஸ்டைலான வில்லனாகவோ, கார்பரேட் வில்லனாகவோ என்னால் நடிக்க முடியும் என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். அது போன்ற கதாபாத்திரங்களை செய்ய நான் ஆர்வமாக இருக்கிறேன். போலீஸ் இல்லாத வில்லன் கதாபாத்திரங்களையும் என்னால்   எளிதாக கையாள முடியும். ஆனால் இதை தாண்டி எனக்கு டார்க் காமெடி நன்றாக வரும், ஆனால் அதை காட்டும் வகையில் எனக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை. அது போன்ற கதாபாத்திரம் எனக்கு அமைந்தால், மக்களும் என்னிடம் இருந்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள். ஒரு நடிகராக அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சென்று அதை சிறப்பாக கையாள வேண்டியது நமது கடமை. அதனால் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் எனது முழு திறமையையும் காட்ட நான் ஆர்வமாக இருக்கிறேன். “
தமிழ் தாண்டி மலையாளம், இந்தியில் நடிக்கிறீர்கள். ஒரு நடிகராக வெவ்வேறு மொழிகளில் நடிப்பது உங்களுக்கு என்னவிதமான உணர்வுகளை கொடுக்கிறது?
ஒவ்வொரு மொழியிலும் திரையாக்கத்திலயே வித்தியாசம் இருக்கிறது. திரைப்படம் எடுக்கும் அணுகுமுறையிலும் வித்திசாயம் இருக்கிறது. இந்தியில் அதிக புரொபசனிலிசம் இருக்கும், கேரவனில் சீன் பேப்பர் நாம் வருவதற்கு முன்னரே இருக்கும். மலையாள சினிமா அதில் இருந்து மாறுபட்டு இருக்கும். தமிழ் சினிமா முற்றிலுமாக வேறு மாதிரி இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
மற்ற மொழிகளிலும் நீங்களே டப் செய்கிறீர்கள் அது பற்றி கூறுங்கள்?
மலையாளம் எனது தாய் மொழி என்பதால் அது எனக்கு சரளமாக வரும். அதோடு தமிழ், ஹிந்தி மொழியும் எனக்கு தெரியும் என்பதால் நானே குரல் கொடுக்கிறேன். ஆனால் நான் எனக்கு குரல் கொடுப்பதை தாண்டி பலர், எனது குரல் சிறப்பாக இருப்பதாக கூறி, என்னை மற்ற நடிகர்களுக்கும் டப்பிங்க் பேச கேட்பார்கள். கார்பரேட் கதாபாத்திரங்கள் பல மொழிகள் பேசும் கதாபாத்திரமாக இருக்கும். அந்த கதாபாத்திரங்களுக்கு நான் டப்பிங்க் கொடுத்தால், அது சிறப்பாக இருக்கும் என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். ஆனால் நான் டப்பிங்க் யூனியன் மெம்பர் இல்லை. அதில் இணைந்த பின்னர் தான் என்னால் அதிகாரபூர்வமாக மற்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுக்க முடியும். இந்த வருடத்தில் அதை செய்யவும் ஆசைபபடுகிறேன் பார்க்கலாம்.
மிகப்பெரிய கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று  யோசித்து இருக்கிறீர்களா?
ஆம்.. அந்த வருத்தம் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நடிகர்கள் வாழ்க்கை  கிரிக்கெட்டர் உடைய வாழ்க்கை போல தான். ஒரு கிரிக்கெட்டர் உடைய வாழ்க்கையை டெஸ்ட் தான் மாற்றும். அதுபோல நிறைய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் போது, ஒரு நாள் எனக்கான திரைப்பட டெஸ்ட் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்  என்று நினைக்கிறேன்.
நீங்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்து, ஆனால் அதை அடையாத கதாபாத்திரங்கள் எவை?
சுந்தர் சி, ஜெய் சார் நடித்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஜெய் சார் உடைய அப்பா கதாபாத்திரத்தில் நடித்தது. அது  ஒருவித்தியாசமான  கதாபாத்திரமாக இருந்தது.
நீங்கள் தற்போது  நடித்து கொண்டு  இருக்கும் படங்கள்?
பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை உடைய அடுத்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை போய் கொண்டு இருக்கிறது.  அடுத்து நடிகர் ரகுமான் சார் உடைய நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு பான் இந்திய வெப் தொடரில் நடிப்பதற்கான ஒப்பந்த வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. அதுபோக இன்னும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் போய் கொண்டு இருக்கிறது.
ஸ்ட்ரியோடைப்பால் சினிமா எதை இழக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
ஒரு குறிப்பிட்ட நடிகரை ஸ்ட்ரியோடைப் செய்யாமல், அவருக்கு என்ன திறமை இருக்கிறது என்று கண்டறிந்து, அவருக்கு தகுந்த கதாபாத்திரத்தை கொடுத்தால் முழு திரைப்படமுமே ஒரு வித்தியாசமான அனுபவமாக தெரியும், சிறப்பாகவும் வரும்.  இன்னும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாய்ப்பு இருக்கிறது. இப்போது இருக்கும் புதுமுக இயக்குனர்கள், ஸ்ட்ரியோடைப்-யை தவிர்த்து நடிகர்களுக்கு அவரது திறமைகளுக்கு  ஏற்றவாறு கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்தால், சிறந்த நடிகர்களை தேர்வு செய்த திரைப்படமாக அது அங்கீகரிக்கப்படும்.
Previous Post

பகாசூரன் – விமர்சனம்

Next Post

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் ‘சீன் ஆ சீன் ஆ’ பாடலுக்கு 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்ததற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தபட்டது

Next Post

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் 'சீன் ஆ சீன் ஆ' பாடலுக்கு 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்ததற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தபட்டது

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

    0 shares
    Share 0 Tweet 0
  • மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

    0 shares
    Share 0 Tweet 0
  • 15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

    0 shares
    Share 0 Tweet 0
  • பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!