*எனது இயக்கத்தில் (19/11/21) அன்று “ஜாங்கோ” திரைப்படம் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.*
இப்படம் முழுக்க முழுக்க தொடர்ந்து வித்தியாசமான கதைகளுக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் சினிமா ரசிகர்களை நம்பி எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் டைம் லூப் சைன்ஸ் பிக்சன் த்ரில்லர் படமாக வெளியாகும் “ஜாங்கோ” முதல் முறை டைம் லூப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.



எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் CV குமார் சார் அவர்களுக்கும், படத்தில் பணியாற்றிய அத்துணை கலைஞர்களுக்கும், தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் என் நண்பர்களுக்கும்-உறவினர்களுக்கு ம், என்னை பெற்றெடுத்த தாய்- தந்தைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Note: இப்படம் சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் வந்து பார்த்தால் மட்டுமே அதை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதால் உங்கள் அனைவரையும் தியேட்டரில் வந்து கண்டுக்களிக்கும்படி அன்புடன் வரவேற்கிறோம்.
நன்றி 

மனோ கார்த்திகேயன்