• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

இஸ்லாமிய திருமண விழாவில்  அமைச்சரை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்…யார் அவர்???

by Tamil2daynews
March 8, 2021
in செய்திகள்
0
இஸ்லாமிய திருமண விழாவில்  அமைச்சரை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்…யார் அவர்???
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம்  ஒரு மணி இருக்கும்,சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார்… அது  இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது  குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பாக்கிறார்கள்….
காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர்,இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால்  அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார்  மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.  மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை.
  ஆனால்  இவர் ஏற்கனவே பல மேடைகளில்  பாடல்களைப் பாடி  மக்களை,தொண்டர்களை ரசிக்க வைத்தவர் என்று தெரிந்த  இஸ்லாமியர்கள் சிலர் தங்களுக்காக ஒரு பாட்டு பாடும்படி கேட்டுக் கொண்டனர்.  இதையடுத்து  இசைக்கலைஞர்கள் இருந்த மேடைக்கு சென்றார்  அமைச்சர் .கலைஞர்களை தன்னுடன் வந்து பாடுமாறு கேட்டுக் கொண்டார். முறைப்படி இசை கற்காவிட்டாலும் கேள்வி ஞானத்தால் பாடி ரசிகர்களை தன் வசப்படுத்தும் அவரைக் கண்டு தயங்கியபடியே வந்த அவர்கள் இவரோடு போட்டி போட முடியுமா இவர் எல்லா இடங்களிலும்  நல்லாப்பாடி பேர் வாங்கிட்டு போயிருவாரு  என்ற எண்ணத்தோடு தயங்கினர்.
அவர்களை ஊக்கப்படுத்தி  இசையமைக்கச் சொல்லி தன்னோடு சேர்ந்து பாடுமாறு கேட்டுக் கொண்டார்.  இதையடுத்து இஸ்லாமியர்களின் விருப்பப்படி  எல்லோரும் கொண்டாடுவோம்;எல்லோரும் கொண்டாடுவோம்…அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி என்ற பாடலைப் பாடினார். 1961இல்  வெளியான பாவமன்னிப்பு படத்தில் கண்ணதாசன் வரியில், டிஎம் சௌந்தர்ராஜன்  குரலில்  ஒலித்த  இந்தப் பாடலை அமைச்சர் ஜெயக்குமார் பாடியதால் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.இதைப் பார்த்த இயக்குனர் பாக்யராஜ் அமைச்சரை வெகுவாகப் பாராட்டினார்
 இந்து,கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மத வேறுபாடுகளைக் கடந்து  எல்லோரிடமும் எப்போதும்,எல்லா இடங்களிலும் நல்லோரின் வாழ்வை எண்ணி…ஒரே மாதிரியாக பழகக்கூடிய  அமைச்சர் இவர் என்பதால்தான்  மக்கள் விரும்பும் நாயகராக இன்னமும் அதே தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை…
Previous Post

இவர் யாரென்று தெரிகிறதா???

Next Post

நடிகர் ஆதி -இன் சமூக சேவை: 

Next Post
நடிகர் ஆதி -இன் சமூக சேவை: 

நடிகர் ஆதி -இன் சமூக சேவை: 

Popular News

  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

    0 shares
    Share 0 Tweet 0
  • ’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.