• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் ! 

by Tamil2daynews
February 1, 2020
in சினிமா செய்திகள்
0
“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் ! 
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில்,  இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது.

Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது பற்றி கூறியாதாவது…

இப்படத்தில் சில காட்சித்தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின் போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால் அவர் ஒப்புக்கொள்வாரா ?  எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது. ஆனால் இயக்குநர் அவரை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரு விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களை கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு  – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

Tags: Ashok SelvanGautham Vasudev MenonOh My KadavuleRithika SinghVijay sethupathi
Previous Post

Takkar – Maragatha Maalai Lyric Video

Next Post

சனம் ஷெட்டி எனக்கு ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய உதவி புரிந்து இருக்கிறார்; அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் – தர்ஷன்

Next Post
சனம் ஷெட்டி எனக்கு ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய உதவி புரிந்து இருக்கிறார்; அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் – தர்ஷன்

சனம் ஷெட்டி எனக்கு ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய உதவி புரிந்து இருக்கிறார்; அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் - தர்ஷன்

Popular News

  • டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

November 13, 2025

காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 13, 2025

“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

November 13, 2025

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

November 13, 2025

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

November 13, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

November 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.