புஷ்பா படத்துல அவங்கள நிர்வாணமா நடிக்க வைக்கிறதா இருந்தோம்… ஆனா? – பகீர் தகவலை வெளியிட்ட இயக்குனர் சுகுமார்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் பகத் பாசில் (Fahadh Faasil) முதன்முறையாக இணைந்து நடித்துள்ள புஷ்பா (pushpa) திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது.
Sukumar on Shelving Allu Arjun, Fahadh Faasil’s Scene in Pushpa
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துள்ள படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
Sukumar on Shelving Allu Arjun, Fahadh Faasil’s Scene in Pushpa
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்… அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.
Sukumar on Shelving Allu Arjun, Fahadh Faasil’s Scene in Pushpa
இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது.



அதன்படி இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த டிசம்பர் 17-ந் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.
ரிலீசுக்கு பின் இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படம் ரூ.229 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது
இந்நிலையில், புஷ்பா படத்தின் கிளைமேக்ஸ் குறித்து பகீர் தகவலை இயக்குனர் சுகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி கிளைமாக்ஸில் அல்லு அர்ஜுனும், பகத் பாசிலும் நிர்வாணமாக சண்டையிடுவது போன்று எடுக்க திட்டமிட்டிருந்தோம்.
பின்னர் ரசிகர்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவ்ர்கள் இருவரும் டவுசர் அணிந்தபடி சண்டையிடுவது போல் அக்காட்சி மாற்றியமைக்கப்பட்டதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.