• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக ’கன்னீத்தீவு’ படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள்!

by admin
January 28, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக ’கன்னீத்தீவு’ படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள்!
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர் அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். அதோடு படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.

வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்சா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ள பெண்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் ஏரியாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்த ஏரியாவில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்தப்பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்தப்பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.

வழக்கமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில், சண்டைக்காட்சிகளுக்காக பெரிய அளவில் பொருட்செலவு செய்வார்கள். அதே அளவுக்கு பெரிய பொருட்செலவில் இப்படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இடம் பெறுகிறது. அதில், இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு சண்டைக் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்படவுள்ளது. “ஸ்டன் சிவா” மாஸ்டர் மிக பிரமாண்டமாக இந்த சண்டைக்காட்சிகளை அமைத்து தந்திருக்கிறார்.

அதைப்போல வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்சா நான்கு பேருமே சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்கள். இதற்காக கலை இயக்குனர் பத்மநாபன் பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்து தந்திருக்கிறார். நிச்சயமாக இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கும். என்கிறார், இயக்குநர் சுந்தர்பாலு.

Tags: Aishwarya DutaAshna SaveriKannitheevuSubhikshasundar BaluVaralakshmi sarathkumarஆஷ்னா சவேரிகன்னீத்தீவுசுந்தர் பாலுவரலக்‌ஷமி சரத்குமார்
Previous Post

Thirumanam – Official Trailer

Next Post

Vantha Rajavathaan Varuven – Trailer

Next Post
Vantha Rajavathaan Varuven – Trailer

Vantha Rajavathaan Varuven - Trailer

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.