இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமண புகைப்படம்..!
திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு “விஸ்வாசம்” திரைப்படத்திற்கு இசையமைத்ததிற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் நடித்த “அண்ணாத்த” திரைப்படத்தில் இசையமைத்து அனைவரிடமும் நல்ல பெயரைப் பெற்றார் டி.இமான்.

அவரின் இரண்டாவது மனைவி யார்..?
இந்நிலையில் தமிழ்த்திரையுலகில் கலை இயக்குநராகப் பணியாற்றி மறைந்த உபால்டுவின் மகள் அமலியை அவர் (15-05-2022)அன்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மணமக்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் உள்ள முக்கிய ஹீரோவின் படங்களுக்கு இசையமைத்துள்ள இமானின் இசை பயணத்தில் அவரது இரண்டாவது மனைவி வந்த யோகம் மேலும் திரையுலகில் பல படங்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.