• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!

by Tamil2daynews
October 10, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!

 

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆல்பி ஆண்டனி சார்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடலோரப் பகுதியான ராமேஸ்வரத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கும் ஒரு மீனவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நீதி, கண்ணியம் மற்றும் மன உறுதி ஆகியவற்றையும் படம் பேசியது.
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘என்ன விலை’ திரைப்படத்தின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக இந்த விருது அமைந்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் கலாமயா சினிவெர்ஸின் முயற்சியில் இது முக்கியமான சாதனை.

விருது குறித்து ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது, “அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெறுவது எனக்கு பெருமையான தருணம். ‘என்ன விலை’ திரைப்படம் அதன் கதைக் களத்துடனும் கதாபாத்திரங்களுடனும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அந்த உலகத்தை காட்சிகளாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெரும் பாக்கியம். இந்தப் பெருமையை இயக்குநர் சஜீவ் பாழூர், தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களான ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்துள்ள இந்தச் சர்வதேச அங்கீகாரம், ‘என்ன விலை’ படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது. படத்தின் காட்சி மொழிக்கும், படக்குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறோம்” என்றனர்.

Previous Post

தமிழகத்தை சேர்ந்த இளம் கராத்தே வீரர்கள் இந்திய- இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் 32 பதக்கங்களை வென்று சாதனை!

Next Post

தாய் நிலம் – விமர்சனம்

Next Post

தாய் நிலம் - விமர்சனம்

Popular News

  • சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

October 10, 2026
ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

October 10, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

October 10, 2026

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

October 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.