• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

by Tamil2daynews
April 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

 

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘டிமாண்டி காலனி3- தி எண்ட் இஸ் டூ ஃபார்’ இந்த வருடம் கோடையில் வெளியாகிறது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முந்திய இரு பாகங்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தப் படத்தை, ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது படத்தின் வெற்றி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

திரையரங்கு விநியோகத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்கள் கொடுத்து திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில். ’டிடி ரிட்டர்ன்ஸ்’, ’கருடன்’, ’மகாராஜா’ மற்றும் ’பைசன் காளமாடன்’ உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றி பெற்ற பல படங்களை அவர் விநியோகம் செய்துள்ளார். ‘டிமாண்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ படத்தின் தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை அவர் கைப்பற்றி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையும் தருவாயில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

படம் குறித்தான ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும்போதும் மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், தனித்துவமான மற்றும் புதுமையான புரோமோஷனல் பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்து வழங்குகிறார். மேலும், ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறையுடன் இணைந்து தங்கல் டிவியும் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து, இயக்கம்: அஜய் ஆர் ஞானமுத்து,
இசை: சாம் சி.எஸ்,
ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்,
படத்தொகுப்பு: குமரேஷ் டி.
Previous Post

தமிழினி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Next Post

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்– அதிரடி ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த அதிரடி முன்னோட்டம்!!

Next Post

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்– அதிரடி ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த அதிரடி முன்னோட்டம்!!

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.