• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ரூம்பாய் – விமர்சனம்

by Tamil2daynews
April 17, 2026
in விமர்சனம்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரூம்பாய் – விமர்சனம்

 

ஜெகன் ராயன் இயக்கத்தில், சி.நிகில் நடிப்பில் உருவாகி வரும் ‘ரூம் பாய்’ (Room Boy) ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும். ஏலகிரியில் உள்ள ஹோட்டல் பின்னணியில், மேலாளர் கொலை மற்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மாயமான சம்பவங்களை மையமாகக் கொண்டு, குடும்ப சென்டிமென்ட் கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

கூர்நோக்கு பள்ளியில் பயின்ற படத்தின் நாயகன் நிகில், அங்கிருந்து தனது சித்தப்பா இருக்கும் ஏலகிரிக்கு செல்கிறார். அங்கிருக்கும் இமான் அண்ணாச்சியில் ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார் நிகில். அங்கு ஏற்கனவே வேலை பார்க்கும் காத்து கருப்பு கலையோடு நட்பாகிறார்.

ஒரு சம்பவத்தால், இருவரையும் வேலையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் இமான் அண்ணாச்சி. அதன்பிறகு வேறு ஒரு ஹோட்டலுக்கு வேலைக்குச் செல்கின்றனர் நிகிலும் கலையும்.

அந்த ஹோட்டலில் பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார் அங்குள்ள மேனேஜர். அதுமட்டுமல்லாமல், அங்கு வரும் ஜோடிகளை ஹிடன் கேமராவில் வீடியோ எடுத்து பணம் பறிக்கும் வேலையிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.

அந்த ஹோட்டலுக்கு தான் வேலைக்குச் செல்கின்றனர் நிகிலும் கலையும். மிகவும் கடுமையான போக்கில் நடந்து கொள்கிறார் அந்த ஹோட்டலின் மேனேஜர்.

முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மேனேஜரை கொடூரமாக கொன்று விடுகிறார். மேனேஜரை கொன்ற அந்த நபர் யார்.?? எதற்காக அந்த கொலை நடந்தது.? இந்த ஒரு கொலையோடு அது நின்றதா காரணம் என்ன.?? உள்ளீட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட் காட்சிகளை வைத்து பதிலளித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே கதைக்கேற்ற நாயகர்களாக ஜொலித்திருக்கின்றனர். கதையின் நாயகனான நிகில், மிகவும் பொருத்தமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். அழகோடு சேர்ந்து நடிப்பிலும் நன்றாகவே மெருகேறியிருந்தார் நாயகி ஹர்ஷா. ஹர்ஷாவின் அப்பாவாக நடித்தவர், பிர்லா போர்ஸ், காத்து கருப்பு கலை, மேனேஜராக நடித்தவர், மிரட்டல் விடுத்து பணம் சம்பாதிப்பவர், ஹோட்டல் ஓனர் என கதையில் தோன்றிய அனைவருமே மிகவும் சரியான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் ஏனோ தானோவென்று செல்லும் கதையானது, இண்டர்வேல் சீனில் நடக்கும் காட்சியில் கதையின் போக்கே மாறி விடுகிறது.

அதன் பிறகு நடக்கும் அதிரடி திருப்பங்கள் படத்தின் சுவாரஸ்யத்தை உச்சிக்கு எடுத்துச் சென்று விடுகிறது. ட்விஸ்ட் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

எந்த இடத்தில் எந்த காட்சியை வைக்க வேண்டும்.? எப்போது எந்த காட்சியை ரிவில் பண்ண வேண்டும் என்பதிலும் மிகவும் தெளிவாக இருந்து, காட்சிகளை மிகவும் சரியாக புகுத்தியிருக்கிறார்.

வில்லனோடு ஹீரோ சண்டையிடும் காட்சியை இன்னும் சற்று எதார்த்தமானதாக மாற்றியிருந்திருக்கலாம். ஹீரோ இன்னும் சற்று நடிப்பு பயிற்சி பெற்றிருந்திருக்கலாம்.

ஒளிப்பதிவு பல இடங்களில் தனது திறமையை காண்பித்திருக்கிறார். குத்து பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது. பின்னணி இசையும் கதையோடு நம்மை பயணம் புரிய வைத்திருக்கிறது.

நல்லதொரு மெசேஜை கூறி, கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்தையும் கொண்டு வந்து வெற்றி கண்டுவிட்டார் இயக்குனர்.
Previous Post

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

Next Post

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

Next Post

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.