• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்

by Tamil2daynews
February 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின்  அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்

2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’.  கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது.

டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியது. அதிரடி காட்சிகளுக்கு அப்பால், கதையமைப்பு மற்றும் நடிகர்களின் ஆழமான நடிப்பே இந்த உலகத்தின் இதயத் துடிப்பாக இருப்பதையும் டீசர் சுட்டிக்காட்டுகிறது.
இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ். அவரது இந்த மாற்றம் முழுமையான புதிய  அவதாரம் என்றே சொல்லலாம். ஒல்லியான, பரவசமான தோற்றத்திலிருந்து, போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, அவரின் ஒவ்வொரு லுக்கும் அவரது கடுமையான பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

ஆனால் இது வெறும் உடல் மாற்றம் மட்டுமல்ல. ஒவ்வொரு தோற்றத்திலும் யாஷ் காட்டும் உடல் மொழியும் நுணுக்கமான நடிப்புத் திறனும், அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை முன்வைக்கின்றன. இதுவரை டாக்ஸிக் பயணத்தில் காணாத ஒரு தைரியமான புதிய அத்தியாயத்தை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.

டீசர் குறித்து  தயாரிப்பாளர்களின் விளக்கம் ஒரு வரியில் முடிகிறது :“It’s gonna get crazyyyy.”

திரையில் காணப்படும் வேகத்தையும், அதிரடியையும் பார்த்தால், மார்ச் 19, 2026 அன்று டாக்ஸிக் உலகம் அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

இந்த டீசர் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகிறது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

எம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

Next Post

‘GS (Gods and Soldiers)’ படப்பிடிப்பு நிறைவு – Post Production பணிகளில் நுழைந்தது படக்குழு!

Next Post

‘GS (Gods and Soldiers)’ படப்பிடிப்பு நிறைவு – Post Production பணிகளில் நுழைந்தது படக்குழு!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.