• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டக்கர் படத்தை தலையில் வைத்து கொண்டாடிய மாயவரம் மக்கள்.

by Tamil2daynews
June 12, 2023
in சினிமா செய்திகள்
0
டக்கர் படத்தை தலையில் வைத்து கொண்டாடிய மாயவரம் மக்கள்.
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டக்கர் படத்தை தலையில் வைத்து கொண்டாடிய மாயவரம் மக்கள்.

 

திரையுலகில் மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்து வரும் “டக்கர்”திரைப்பட இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பொதுமக்களும், ரசிகர்களும் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, நடனமாடி வரவேற்பளித்துக் கொண்டாட்டம். குடும்பதினருடன் டக்கர் திரைப்படத்தை கண்டு களித்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்.
வெற்றி படமாக மாற்றி வரும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் பேட்டி.

இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த டக்கர் திரைப்படம் நேற்று தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உலகம் முழுவதும் திரையில் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டக்கர் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் பொதுமக்களும், ரசிகர்களும் இணைந்து மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து, மயிலாடுதுறை விஜயா திரையரங்க வளாகத்தில் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திரையுலகில் சாதனை படைத்து வரும் இயக்குனரை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். தொடர்ந்து திரையரங்கில் ரசிகர்களுடன் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் டக்கர் திரைப்படத்தை கண்டு களித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய டக்கர் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் உலகம் முழுவதும் ஜூன் 9ஆம் தேதி திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சென்று திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை இந்த படத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். குறிப்பாக எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் ரசிகர்களும், பொதுமக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து எனது திரையுலக பயணத்திற்கு பாராட்டு தெரிவித்து, வாழ்த்திய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டக்கர் திரைப்படம் இக்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் அனைவரது ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இதில் கதாநாயகனாக சித்தார்த் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தயாரித்துள்ள பேஷன் ஸ்டுடியோ மற்றும் அனைவருடைய ஒத்துழைப்போடு மிகச்சிறந்ததொரு படமாக டக்கர் திரைப்படம் ரசிகர்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ரசிகர்களோடும் பொதுமக்களோடும் திரைப்படத்தை கண்டு களித்தது தனக்கு மிகப்பெரிய நிறைவை தருவதாக இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் தெரிவித்தார்.

பேட்டி : கார்த்திக் ஜி க்ரிஷ்
டக்கர் திரைப்பட இயக்குநர்.

Previous Post

சரத்குமாருக்கு புகழாரம் சூட்டும் மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்

Next Post

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் ஒளியேற்றிய லைக்கா சுபாஷ்கரன்!

Next Post
26  இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் ஒளியேற்றிய லைக்கா சுபாஷ்கரன்!

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் ஒளியேற்றிய லைக்கா சுபாஷ்கரன்!

Popular News

  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.