• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பராசக்தி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
January 11, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பராசக்தி – விமர்சனம் 

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே வெளிவந்திருக்கும் படம் பராசக்தி.

முழுக்க முழுக்க தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக வந்திருக்கும் படமே பராசக்தி.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் சிவகார்த்திகேயன் போராடுகிறார். படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு இரயிலை எரிக்கிறார். இதை தொடர்ந்து ரவிமோகன் இந்த கும்பலை பிடிக்க வேண்டும் என கங்கனம் கட்டி சுற்றுகிறார்.

அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் இரயில் எரிப்பில் இறக்க, இனி இந்த வன்முறை, எதிர்ப்பு எல்லாம் வேண்டாம் என சிவகார்த்திகேயன் அனைத்தையும் கைவிடுகிறார்.ஆனால், அவர் தம்பி அதர்வா அதை கையில் எடுக்க, சிவகார்த்திகேயன் ஹிந்தி படித்து டெல்லிக்கு வேலைக்கு செல்ல நினைக்கிறார்.
அப்போதும் ஹிந்தி படித்தால் தான் இனி வேலை என்ற நிலை உருவாக, சிவகார்த்திகேயன் கண்முன் ஒரு இளைஞன் இறக்க, சிவகார்த்திகேயனுக்கும் வேலை கிடைக்காமல் போக, மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்கும் சிவகார்த்திகேயன் வென்றாரா, ரவிமோகன் இவர்களை பிடித்தாரா? என்ற புரட்சி போராட்டமே பராசக்தி.

சிவகார்த்திகேயன் செழியனாகவே வாழ்ந்துள்ளார். போராட்டம் என வாழ்க்கையை வாழ்ந்து, ஒரு இழப்பிற்கு பிறகு போராட்டத்தை கைவிட, இங்கு போராடினால் தான் எதுவும் கிடைக்கும் என்ற நிலையில் மீண்டும் போராட்ட களத்தில் குதிக்க, கடைசி வரை இரத்தம் சிந்தி அவர் போராடும் காட்சிகள் நடிகனாக சிவா பல மடங்கு உயர்ந்து விட்டார். கண்டிப்பாக சிவாவுக்கு இது மைல்கல் படம் தான்.

ரவி மோகன் படம் முழுவதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு அதிகாரியாக, எத்தனை உயிர் போனாலும் சரி, நான் நினைப்பது நடக்க வேண்டும் என அவர் செய்யும் வேலைகள் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்.

அதர்வா எனர்ஜி பூஸ்ட் இளைஞனாக வந்து கவர்கிறார், ஸ்ரீலீலா தமிழுக்கு அறிமுகம், நல்ல நடிப்பு, ஆனால், முதல் பாதி இவர்-சிவகார்த்திகேயன் ரொமான்ஸ் காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் கிளைமேக்ஸில் ஸ்ரீலீலா ஸ்கோர் செய்கிறார்.

படமே ஹிந்தி திணிப்புக்கு எதிரானது என்பதால், பல வரலாற்று நிகழ்வுகளை கற்பனை, சித்தரிக்கப்பட்டவை என்று போட்டாலும் அது பார்க்கும் ரசிகர்கள் படத்தோடு ஒன்றி கமெண்ட் அடித்து கட் செய்த காட்சியையும் ரசிகர்கள் புரிந்து கொள்கின்றனர்.

அதே நேரத்தில் படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்கள் தான், ஹிந்தி திணிப்புக்கு தான் எதிரி, ஹிந்திக்கு இல்லை, முதலில் ஹிந்தி படிங்க வேலை என்றீர்கள், இப்போ ஹிந்திகாரன் போல் பேசு என்கிறீர்கள், இரண்டு பேரையும் ஒரே கோட்டில் ஓட்டத்தை தொடங்க சொல்வது தானே முறை, சிப்பாய் கழகம் முன்பே போராடியவன் தமிழன், எனக்கு தேசபக்தி க்ளாஸ் எடுக்காதே போன்ற பொறி பறக்கும் வசனங்கள் பட்டையை கிளப்புகிறது.
ஆர்ட் ஒர்க் அப்படியே நாமும் 1960-களுக்கு சென்ற அனுபவம், படத்தின் கதை மாந்தர்கள் தேர்விலேயே படம் செம ஸ்கோர் தான், மைக்கெல் ரெட்டி ரெபரன்ஸ், பாசில் ஜோசம் கேமியோ என கிளைமேக்ஸ் கூஸ்பம்ஸ் குவிந்து கிடைக்கிறது.
படத்தின் முதல் பாதி காதல் காட்சிகள் கண்டிப்பாக கத்திரி போட்டு இருக்கலாம், அது தான் பொறுமையை சோதிக்கிறது, அதிக கட், மியூட் எல்லோருக்கும் இது புரியுமா என்ற நிலையும் உள்ளது. டெக்னிக்கலாக இப்படம் இசை, ஒளிப்பதிவு, ஆர்ட் ஒர்க் என அனைத்தும் அட்டகாசம்.
ஜீவி பிரகாஷ் குமாருக்கு நூறாவது படம் பாடல்களிலும் பின்னணி இசைகளும் மிரட்டி இருக்கிறார்.

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மீண்டும் ஒரு மைல்கல்.

காலங்கள் அழிந்தாலும் சிவகார்த்திகேயன் பட வரிசையில் அமரன், பராசக்தி தவிர்க்க முடியாத படமாக இருக்கும்.

60 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று தெரியாமல் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.

மொத்தத்தில் இந்த பராசக்தி பரவசமான சக்தி.

தமிழ் தீ தமிழக மக்களிடையே நிச்சயம் பரவும்.
Previous Post

தி ராஜா சாப் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1” தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!

Next Post

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1” தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.