• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் – நடிகர் சௌந்தரராஜா

by Tamil2daynews
February 4, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் – நடிகர் சௌந்தரராஜா

 

வடபழனி முருகன் பாதத்தில் தவெக கொடி மற்றும் சின்னம் – 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மாஸ் காட்டிய நடிகர் சௌந்தரராஜா

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நடிகர் சௌந்தரராஜா வடபழனி முருகன் கோவிலில் விசில் சின்னத்தை வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.

மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மற்றும் த.வெ.க. கட்சியை சேர்ந்த பலர் நடிகர் சௌந்தரராஜாவுடன் வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு முடித்து வெளியே வந்த நடிகர் சௌந்தரராஜா கோவிலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு லட்டு மற்றும் விசில் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சௌந்தரராஜா, “கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் எந்த கட்சிக்கும் இந்தளவிற்கு ஆதரவு இருக்காது. த.வெ.க. மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 25 சதவீதம் வாக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்றைக்கு விசில் சின்னத்தை முருகனின் பாதத்தில் வைத்து விஜய் பெயரில் அர்ச்சனையும் கட்சி கொடி மற்றும் சின்னத்திற்கு சிறப்பு பூஜையும் செய்து பொதுமக்களுக்கு விசிலும், லட்டும் வழங்கி கொண்டாடி வருகிறோம்.
விஜய் அண்ணா சொன்ன மாதிரி எங்களிடம் மக்கள் கூட்டணி உள்ளது. மாற்றத்தை விரும்பக்கூடிய மக்கள் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து தி.மு.க. தான் எங்களுடைய எதிரி என்று தெளிவாக கூறியுள்ளார். அவர்கள் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றியுள்ளார்கள் என்று திருக்குறள் மூலம் எளிய மக்களுக்கு கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பா.ஜ.க. தலைமையில் தான் மற்ற கட்சிகள் இருப்பது போல தெரிகிறது. அதனை தான் என் தலைவர் கூறியுள்ளார்.
நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது ஆனால் விஜய் எந்த இடத்திலும் அதை பற்றி பேசவில்லை. அவருக்கு பட்ஜெட் பற்றி தெரியுமா எங்கு பார்த்தாலும் தி.மு.க.வை மட்டும் விமர்சனம் செய்கிறார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு,
அவருக்கு பட்ஜெட் பற்றி நன்றாக தெரியும். இந்த விழாவில் என்ன பேச வேண்டுமோ அதை தான் பேசியுள்ளார். ஒரு முக்கியமான நாளில் அதற்கும் விளக்கம் கொடுப்பார்.
வேளச்சேரியில் விஜய் போட்டியிடுவார் என்ற செய்தி வருகிறதே அது உண்மையா என்ற கேள்விக்கு? அவர் எங்கு நின்றாலும் அவர் வெற்றி பெறுவார். கூடிய விரைவில் அவரே அறிவிப்பார்.
விசில் சின்னத்தை வேறு வார்த்தை பயன்படுத்தி கிண்டல் செய்கிறார்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  இதிலும் அரசியல் பண்ண வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.
எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம். விஜய் அண்ணாவின் மீடியா தேவை இப்போதைக்கு தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக மீடியாவை சந்திப்பார். நீங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கும் கண்டிப்பாக பதில் சொல்வார்.
அவர் ஆட்சிக்கு வந்து சொன்னதை செய்யாமல் இருந்தால் நீங்கள் அவரிடம் கேள்வி கேட்கலாம். அவர் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறார்.
அவர் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரிடம் கேள்வி கேட்டு மீண்டும் மீண்டும் அவரை காயப்படுத்தாமல் அவர் ஏதேனும் தவறு செய்தால், பொய் சொன்னால் கேள்வி கேளுங்கள்.
உங்களுக்கு பொறுப்பு இல்லை ஆனால் கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு?
இந்த கேள்வி என்னை மாட்டி விடுவது போல இருக்கிறது. பொறுப்பு இருந்தால் தான் நான் வேலை செய்வேன் என்று இல்லை. தளபதியின் அன்பு தம்பி என்பதே மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன்.
Previous Post

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!

Next Post

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி’ திரைப்படம் Hotstar Specials-ஆக, JioHotstar தளத்தில் பிப்ரவரி 20 அன்று வெளியாகிறது!

Next Post

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'லக்கி' திரைப்படம் Hotstar Specials-ஆக, JioHotstar தளத்தில் பிப்ரவரி 20 அன்று வெளியாகிறது!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.