• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

by Tamil2daynews
October 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

 

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை அழுத்தமாகப் பேசும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் இருக்கும் உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளதுடன், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பாளராக செல்வா RK, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். கலை இயக்கத்தை ராமு தங்கராஜும், சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயனும் கவனிக்கின்றனர்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பில் வேகம் காட்டி வரும் ‘மாகாளி’, தற்போது பரபரப்பாக தயாராகி வருகிறது.

Previous Post

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

Next Post

“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

Next Post

"சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை"-நடிகை ஃபரியா அப்துல்லா!

Popular News

  • ’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!

    0 shares
    Share 0 Tweet 0
  • “சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

October 7, 2026

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!

October 7, 2026

“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

October 7, 2026

அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

October 7, 2026

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

October 7, 2026

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!

October 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.