ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின் ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,

by Tamil2daynews
April 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
  1. ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின் ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,
இந்திய இசையமைப்பாளரும் கிராமி வெற்றியாளருமான ரிக்கி கேஜ் மற்றும் ராக்-லெஜண்ட் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் (தி போலீஸ்) ஆகியோர் 64வது வருடாந்திர கிராமி விருதுகளில், அவர்களின் சமீபத்திய ஆல்பமான ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளனர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய லேபிள் Lahari Music இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளது. விருது வழங்கும் விழா  நேற்று இரவு லாஸ் வேகாஸில் நடைபெற்றது, அங்கு ரிக்கி கெஜ் மற்றும் ஸ்டீவர்ட் கோப்லேண்ட் ஆகியோர் டிவைன் டைட்ஸிற்காக, சிறந்த நியூ ஏஜ் ஆல்பத்திற்கான விருதைப் பெற்றனர்.
விருது வென்ற ரிக்கி பார்வையாளர்களிடம் நமஸ்தே என இந்திய மொழியில் வணக்கம் வைத்து தன் உரையை ஆரம்பித்தார். அவர் தன் உரையில் கூறுகையில்… இரண்டாவது முறையாக விருதை வெல்வது நம்பமுடியாத ஆச்சர்யம். டிவைன் டைட்ஸ் ஆல்பம்  வாழும் சாதனையாளர் உலகின் மிகச்சிறந்த டிரம்மர் 5 முறை கிராமி விருது வென்ற,  மிகப்பெரும் வெற்றிகரமான பேண்டான ‘தி போலீஸ்’ பேண்ட் குழுவின் டிரம்மர்   ஸ்டீவர்ட் கோப்லாண்ட் உடன் இணைந்து உருவாக்கியதாகும். ஒரு வருட காலம்  முன்னதாக நாங்கள் இந்த ஆல்பத்தில் இணைந்து பணியாற்ற துவங்கினோம் ஆனால் கோவிட் காரணங்களால்  நேரில் சந்திக்கவில்லை.  7 நாட்களுக்கு முன்னதாக தான் அவரை சந்தித்தேன். நேரில்  லாஸ் வேகாஸில்  அவரை சந்தித்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. சிறு வயதில் அவரது இசையை கேட்டு தான் வளர்ந்தேன், இப்போது அவருடன் இணைந்து மேடையில் விருது வாங்குவது நினைத்து பார்க்கமுடியாத அதிசய அனுபவமாக உள்ளது. 75 வருட சுதந்திதர இந்தியாவிற்கு இந்த விருதை சமர்பிக்கிறேன். உன்னதமான சுதந்திரம் இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல். இந்தியாவுக்காக விருது வென்ற இந்த வருடம் எனக்கும் மிகப்பெரிய திருப்புமுனை வருடம்.

கிராமி விருது வென்றது குறித்து Lahari Music  CMD  G மகேந்திரன் கூறியதாவது..

 

வரலாற்று சாதனையாளர் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் மற்றும் ரிக்கி கேஜ்  கூட்டணி இந்த விருதை வென்றது மிக அற்புதமானது. Lahari Music தயாரித்த டிவைன் டைட்ஸ் விருதை வென்றது இந்தியா நாட்டிற்கு மிகப்பெரிய அங்கீகாரம். நியூ ஏஜ் ஆல்பங்களில் சிறந்த ஆல்பம் எனும் விருதை வென்றதன் மூலம் இந்தியா உலக வரைபடத்தில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள கலைஞர்களைக் கொண்டு, உருவான தற்போதைய கிராமி விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்ட இசை ஆல்பமான ‘டிவைன் டைட்ஸ்’ நமது இயற்கை உலகின் மகத்துவத்திற்கும் நமது உயிரினங்களின் பின்னடைவுக்கும் அஞ்சலி செலுத்துகிறது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த ஆல்பத்தில் 9 பாடல்கள் மற்றும் 8 இசை வீடியோக்கள் உள்ளன, அவை இந்திய இமயமலையின் நேர்த்தியான அழகு முதல் ஸ்பெயினின் பனிக்கட்டி காடுகள் வரை உலகம் முழுவதும் படமாக்கப்பட்டன. ‘டிவைன் டைட்ஸ்’ ஏற்கனவே உலகம் முழுவதும் பல்வேறு விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி ரெக்கார்ட் லேபிளான Lahari Music மூலம் இசை வீடியோக்கள் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன.
சுவாரஸ்யமான விசயம் என்ன்வென்றால், இது ரிக்கியின் 2வது கிராமி விருது மற்றும் ஸ்டீவர்ட் கோப்லாண்டின் 6வது விருது! சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பிடித்திருக்க வைத்திருக்கும், Lahari Music க்கிற்கு மட்டுமின்றி, இந்நாட்டிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
Previous Post

Sridevi Movies தயாரிப்பில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ திரைபடம் ஆகஸ்ட் 12 வெளியாகிறது !

Next Post

“டான்” படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்..!

Next Post
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,

"டான்" படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்..!

Popular News

  • இரண்டு பாகங்களாக தயாராகும் “பொன்னியின் செல்வன்” ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கெட்ரி” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

July 6, 2022

பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்

July 6, 2022

பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

July 6, 2022

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.