• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Zee5 தளத்தில் வெளியான விடுதலை திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது

by Tamil2daynews
June 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Zee5 தளத்தில் வெளியான விடுதலை திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது

 

தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கிய படைப்பாக கொண்டாடப்பட்ட, RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகானாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை”  திரைப்படம், சமீபத்தில் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியானபோதே,  இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 28, 2023, Zee5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம்  பார்வையாளர்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்று, மிக குறுகிய காலகட்டத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முத்திரை படைப்புகளை வழங்குவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன்.
அந்த வகையில்  அவரது சமீபத்திய வெளியீடான ‘விடுதலை பாகம் 1’  சமூக அக்கறை கொண்ட   படைப்பாக, அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.
தமிழ் திரையில் இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்முறையாக இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் கதைநாயகனாக நடித்துள்ளார். தன் திரை வாழ்வின் முக்கியமான பாத்திரத்தில் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். திரையரங்குகளில் வெளியான பதிப்பில், ரசிகர்கள் காணாத பல முக்கிய காட்சிகளுடன்  இயக்குநரின் முழுமையான பார்வையில் அன்கட் வெர்ஷனாக இப்படம் Zee5 தளத்தில் வெளியானது. வெளியான மிக குறுகிய காலத்தில், 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
Zee5 2023  ஆம்  ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே  மிகவும்  வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான  திரைப்படங்களை Zee5 வழங்கி வருகிறது. Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும்  ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது விடுதலை பாகம் 1 திரைப்படமும் இணைந்துள்ளது.
எண்ணற்ற வெற்றிப்படைப்புகளை கொண்டிருக்கும் Zee5 தளம்  புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. Zee5 உடன் இணைந்திருங்கள் கோடையை கொண்டாடுங்கள்.
Previous Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் செல்ஃபி அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Next Post

திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்

Next Post

திருப்பதியில் வெளியிடப்பட்ட 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம்

Popular News

  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் தொடர் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.