• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரைத்துறையில் இரண்டாம் அத்தியாயத்தை இப்போது தான் தொடங்கியுள்ளேன் – வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்

by Tamil2daynews
March 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரைத்துறையில் இரண்டாம் அத்தியாயத்தை இப்போது தான் தொடங்கியுள்ளேன் – வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்

 

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘ வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது.  தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் 140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், டூரிஸ்ட் ஃபேமலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவந்த், நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் வி.ஜெ.சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசையமைப்பாளர்  சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷணகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில்  நடிகர் தனுஷ் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன்  ஆகியோரும் பங்கேற்றனர்.

நடிகர் தனுஷ் விழாவில் பேசுகையில் “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன்.
எனக்கு வேல்ஸ் பல்கலைக்கழக்த்திற்கு தொடர்பு உண்டு என் முதல் படம் துள்ளுவதோ இளமை இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்”
விழாவில் பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்  “ என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க இருக்கும் வட சென்னை 2 தான் என்றே கூறலாம் அதேபோல் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது” என தெரிவித்தார்.

டிஜே தீபிகா இசையால் விழாவிற்கு மேலும் உற்சாகம் சேர்த்தார். இறுதியாக வானில் வெடித்த  வண்ணமயமான பட்டாசுகள் இரவை ஒளிரச் செய்து, விழாவிற்கு சிறப்பான நிறைவாக அமைந்தது.

Previous Post

ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது

Next Post

தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், சுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் – தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!

Next Post

தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், சுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் - தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • மொத ராத்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.