• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ விமர்சனம்

by Tamil2daynews
June 3, 2023
in விமர்சனம்
0
0
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’  விமர்சனம்

 

தொடர்ந்து அடி மேல் அடிவாங்கும் ஆர்யா, இது ரொம்ப ஓவர் யா…!

முத்தையாவின் கம்பெனி முத்திரையான கருப்பு வேட்டி,கருப்பு சட்டை கதாநாயகனுக்கு பரட்டை தல முகத்துல தாடி இந்த அடையாளத்தோட படத்தில் வராரு ஆர்யா.

கதாநாயகியின் சொத்துக்களை அபகரிக்கும் நினைக்கும் அவரின் முறை மாமன்கள் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில்தான் ஜெயிலில் இருக்கும் காதர் பாட்ஷாவை  நேரில் சந்திக்க செல்கிறாள் செல்வி. ஆனால் அந்த சந்திப்பு கைகூடாமல் போகிறது.
Kathar Basha Endra Muthuramalingam' movie review: Even Muthaiya's tried and tested tropes can't save this exhausting hotchpotch - The Hindu
இதனை தெரிந்து கொள்ளும் காதர் பாட்ஷா தன்னைத் தேடி வந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ள செல்வியை நோக்கி செல்கிறான். அங்கு மோதல் வெடிக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? காதருக்கும் செல்விக்கும் என்ன தொடர்பு? செல்வியின் சொத்துக்கள் என்ன ஆனது? செல்வியுடன் இருக்கும் அவரது அண்ணன் மகள்களின் நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே ‘காதர்பாட்சா என்ற முத்து ராமலிங்கம்’ படத்தின் கதை.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதாபாத்திரத்தில் ஆர்யா கொஞ்சம் கூட பொருந்த வில்லை. திக்கி திணறும் அவரது வசன உச்சரிப்பு சிரிப்பை வர வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் மட்டும் முகத்தை விறைப்பாக வைத்து இருக்கிறார்.

ஜமாத் தலைவராக வரும் நடிகர் பிரபிவின் நிதானமான நடிப்பு சிறப்பு. ஆடுகளம் நரேன், கே.ஜி.எஃப் வில்லன் புகழ் அவினாஷ், ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் என வதவதவென வரும் வில்லன்கள் அனைவரும் வழக்கமான முத்தையா பட வில்லன் வகையறாவை சேர்ந்தவர்களாய் மிரட்டுகின்றனர்.
Kathar Basha Endra Muthuramalingam Movie Stills - Kalakkal Cinema
குறிப்பாக தமிழின் ஸ்கீரின் பிரசன்ஸ் மிரட்டல். தமிழ் செல்வியாக வரும் சித்திக் இத்னானின் கதாபாத்திரம் முத்தையாவின் முந்தைய பெண் கதாபாத்திரங்கள் பெற்ற முக்கியத்துவத்தை பெறாமல் கடந்து சென்றது ஏமாற்றம். குரூப் டான்ஸ்சராக இருந்து சினிமாவுக்கு வந்த நடிகை ஹேமா தயால் நடிப்பு மிகச்சிறப்பு.

முதல் பாதியில் சகட்டு மேனிக்கு சண்டைக்காட்சிகள், தேவையில்லாத பில்டபுக்கள் என படம் பார்ப்பவர்களுககு சோதனை மேல் சோதனை. கூடவே ஆர்யா நடிப்பு போனஸ் எரிச்சல்.

இரண்டாம் பாதியில் கொஞ்சம் நிதானித்து இராமநாதபுரம் இஸ்லாம் மற்றும் இந்து மக்களுக்கு இடையான பிணைப்பை சொன்ன விதம் நன்றாக இருந்தது. ஆனால் அதிலும் கதைக்குள் கதை, அந்தக்கதைக்குள் இன்னொரு கதை என சுற்றி சுற்றி வந்தது நம்மையும் சுற்றலில் விட்டு விட்டது. அதன் காரணமாக இரண்டாம் பாதியில் முத்தையா சொல்ல வந்த கருத்தும் அதன் முழுவீரியத்தை இழந்து நின்றது. ‘கறிக்கொழம்பு வாசம்’ பாடல் துள்ளல். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிரட்டல். வேல்ராஜின் ஒளிப்பதிவு முடிந்த அளவு கதையோடு நம்மை ஒன்ற வைத்திருக்கிறது.

காதர்பாட்ஷா வெறும் காதர் மட்டுமே பாட்ஷா இல்லை.
Previous Post

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்

Next Post

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ; நேரில் சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் படக்குழு

Next Post

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ; நேரில் சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் படக்குழு

Popular News

  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் தொடர் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.