• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்

by Tamil2daynews
June 1, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்

 

நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ‘தேரு’ (2023) மற்றும் ‘ஜிபூட்டி’ (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதல், சண்டைக் காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘பேட்ட ராப்’ உருவாக உள்ளது. இதற்கேற்ற வகையில்  “பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்” என்ற சுவாரசியமான டேக்லைன் இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.  பிரபுதேவாவை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்த வகையில் இப்படம் காட்டும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். கதை மற்றும் திரைக்கதையை டினில் பிகே எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளன.
டி இமான் இசையமைக்க, ஐந்துக்கும் அதிகமான பாடல்களோடு வண்ணமயமாக ‘பேட்ட ராப்’ உருவாகிறது. படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர்.
விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் படத்தின் மற்ற நடிகர்கள் ஆவர்.
தொழில்நுட்ப குழுவினர்: தலைமை இணை இயக்குநர் – சோழன், தயாரிப்பு நிர்வாகி – எம்.எஸ்.ஆனந்த், சசிகுமார் என், பாடல்கள் – விவேகா, மதன் கார்க்கி, ப்ராஜெக்ட் டிசைனர் – துஷார் எஸ், கிரியேட்டிவ் பங்களிப்பு – சஞ்சய் கசல், ஆடை வடிவமைப்பு – அருண் மனோகர், ஒப்பனை – அமல் சந்திரன், ஸ்டில்ஸ் – சாய் சந்தோஷ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பிரதிஷ் சேகர், வி எஃப் எக்ஸ் – விபின் விஜயன், டிசைன்ஸ் – மனு டாவின்சி.
புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
Previous Post

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் இயக்குனர் பாரதி கணேஷ்-ன் புதிய படம் ஆரம்பமாகிறது

Next Post

‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ விமர்சனம்

Next Post

'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' விமர்சனம்

Popular News

  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.