“ஜெயிலர்” படபிடிப்பு, சென்னையில் ரஜினிகாந்த்..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் `ஜெயிலர்’. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் இன்று (ஆகஸ்ட் 22) தொடங்கியுள்ளது. இதையொட்டி, `ஜெயிலர்’ படத்தின் புதிய `போஸ்டர்’ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கைகளை பின்பிறம் வைத்தவாறு, கோபமாக ரஜினி பார்க்கும் அந்த `போஸ்டர்’ வலைதளங்களில் ரசிகர்களால் வேகமாக பகிரப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் `ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான `காலா’, `பேட்ட’, `தர்பார்’, `அண்ணாத்த’ படங்களின் படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் தொடங்கின. தற்போது `ஜெயிலர்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் புதிய படத்தின் படப்பிடிப்பு 22-08-2022 அன்று ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஜெயில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு ஆரம்பமானது.முதல் நாளே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்தார் .நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் படபிடிப்பின் முதல் நாளே சென்னையில் தொடங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.