• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு  கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது !

Filmmaker Shakti Soundar Rajan director Arya starrer titled “CAPTAIN”

by Tamil2daynews
November 18, 2021
in சினிமா செய்திகள்
0
ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு  கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது !
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், படைப்பாளி  சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு  கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது !


பெரு வெற்றி பெற்ற “டெடி” திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது படக்குழு, படத்திற்கு  “கேப்டன்”   எனும் டைட்டிலை அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில்..
“கேப்டன்” எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து,  சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மேலும் கூறுகையில், தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும் என்றார்.

நடிகர் ஆர்யா பற்றி இயக்குனர் கூறியதாவது..,
தான் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்திலும்,  தன் உயிரைக்கொடுத்து, உழைக்கும் நடிகர் ஆர்யா பற்றி நான் என்ன கூறுவது, அவர் நடிப்பு திறமை குறித்து ஊரே அறியும். “கேப்டன்” படத்தை பொறுத்தவரை இப்பாத்திரத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து முழு அர்ப்பணிப்பையும் தந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் அதனை ஒவ்வொரு படத்திலுமே மாறமால் செய்து வருகிறார் ஆர்யா. இந்த திரைப்படம் இப்போது இருக்கும் ரசிகர் வட்டத்தை  தாண்டி,  பல மொழிகளிலும் அவரது ரசிகர் வட்டத்தை பெருக்கும் என்றார்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாத மத்தியில் செல்லவுள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

“கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

Previous Post

சமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை

Next Post

Natural Star Nani’s Highly Anticipated Masterpiece Shyam Singha Roy’s Teaser Unveiled

Next Post
Natural Star Nani’s Highly Anticipated Masterpiece Shyam Singha Roy’s Teaser Unveiled

Natural Star Nani’s Highly Anticipated Masterpiece Shyam Singha Roy’s Teaser Unveiled

Popular News

  • மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.