• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
September 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

 

செப்டம்பர் 25, 2026: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. பாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம் பாடலில் பக்தி மணம் பரப்புகிறது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “தலைமுறை தலைமுறையாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வழிநடத்தும் ஸ்ரீ ராமர்தான் ‘ராமாயணம்’ கதையின் மையம். இருள் சூழும் தருணங்களிலும்,குழப்பம் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் அவரது பாதையைப் பின்பற்றுகிறோம். மகிழ்ச்சியான தருணங்களில் நன்றியுடன் அவரை நினைவுகூருகிறோம். ஸ்ரீ ராமருடன் நாம் கொண்டிருக்கும் வலுவான பிணைப்பில் இருந்து உருவானதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்.‘ராமாயணம்’ மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உரு்ாக்கப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான அடித்தளம் அதன் உணர்விலும், மதிப்புகளிலும், பக்தியிலும்தான் உள்ளது. முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பக்தியை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். நாம் வழிபடும் ஒருவராக மட்டுமல்லாமல், நம்முள் இருக்கும் பாதுகாவலர், வழிகாட்டி மற்றும் வலிமையின் ஆதாரமாக ஸ்ரீ ராமரைக் கொண்டாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “ஸ்ரீ ராமரின் திருநாமத்தை எளிமையாகவும் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல். பக்தி மாறாமல் கேட்பவர்களுக்கு என்றும் மனதில் ஒலிக்கும் பிரார்த்தனையாகவும் அதே சமயம் அந்த இசை ஒரு திரைப்பாடலாகவும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தீபாலி சஹாய் மற்றும் ராகவ் கௌஷிக் ஆகியோர் ராகேந்து மௌலியின் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில், பாடலின் பக்தி உணர்விலிருந்து அவர்கள் விலகவில்லை. இந்தப் பாடல் ரசிகர்களுக்கு அமைதியையும் ஆன்மீக  உணர்வையும் தரும் என்று நம்புகிறேன்” என்றார்.
ரன்பீர் கபூரின் ராமாயணம்: ரஹ்மான் இசையில் 'ஜெய் ஜெய் ராம்' முதல் பாடல்! Ranbir's Ramayana: First Song Jai Jai Ram by AR Rahman Out Now! - Vikatanநிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில், ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது வென்ற DNEG நிறுவனத்துடன் இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை விநியோகம் செய்கிறது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ராமாயணம் – பாகம் 1’ திரையரங்குகளில் வெளியாகிறது.

DNEG பற்றி:
DNEG என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆழமான உள்ளடக்கங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் அனிமேஷன் நிறுவனமாகும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட DNEG, 2011 முதல் ‘சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்’ பிரிவில் 8 அகாடமி விருதுகளை வென்றுள்ளது. மேலும், தனது உயர்தரமான படைப்புகளுக்காக பல BAFTA, பிரைம்டைம் எம்மி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளையும் பெற்றுள்ளது.

தி ஆடிஸி (ஜூலை 2026), மோட்டார் சிட்டி (ஜூலை 2026), கோயோட் vs அக்மே (ஆகஸ்ட் 2026), ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (ஆகஸ்ட் 2026), கிளாரா அண்ட் த சன் (அக்டோபர் 2026), ஸ்ட்ரீட் ஃபைட்டர் (அக்டோபர் 2026), தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் – சீசன் 3 (நவம்பர் 2026), தி கேட் இன் தி ஹேட் (நவம்பர் 2026), ராமாயணம்: பாகம் 1 (நவம்பர் 2026), தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 3 (டிசம்பர் 2026), அபோவ் தி பிலோ (டிசம்பர் 2026), அனிமல் பிரண்ட்ஸ் (ஜனவரி 2027), பேட் ஃபேரிஸ் (மே 2027), பிளேட் ரன்னர் 2099, அலோன் அட் டான், எஸ்ஏஎஸ்: ரோக் ஹீரோஸ் சீசன் 3, ஆன் தி லைன், ரோட் ஹவுஸ் 2, ஸ்னூபி அன்லீஷ்ட், பிளட் ஆன் ஸ்னோ, திஸ் சிட்டி இஸ் அவர்ஸ் சீசன் 2, பிளாக் பேலஸ், குண்டம் மற்றும் தி ஆடிஸி ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.

பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவால் நிறுவப்பட்ட பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், உலகளாவிய பார்வையாளர்களுக்காகத் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் ஆகிய துறைகளில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய படைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை உருவாக்குகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் சமீபத்தில் தயாரித்த ‘தி கார்பீல்ட் மூவி’ என்ற அனிமேஷன் திரைப்படம், உலகம் முழுவதும் 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது.

தற்போது பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பல சுவாரஸ்யமான திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸிமம் எஃபோர்ட் ஆகியவற்றுடன் இணைந்து லைவ்-ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் கலந்த திரைப்படமான அனிமல் பிரண்ட்ஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ரோவியோ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், சேகா, ஃப்ளைவீல் மீடியா, ஒன் கூல் க்ரூப் மற்றும் டெண்ட்சு ஆகியவற்றுடன் இணைந்து அனிமேஷன் திரைப்படமான ‘தி ஆங்கிரி பேர்ட் மூவி 3’ ஆகியவை அடங்கும். மேலும், 5,000 ஆண்டுகள் பழமையான காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ராமாயணம்’ கதையின் இரண்டு பாகங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக வழங்குவதோடு, விரிவான ‘டிரான்ஸ்மீடியா’ உலகத்தையும் உருவாக்கவுள்ளது.

மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:

நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.

டி- சீரிஸ் மியூசிக் பற்றி:

இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமாகவும், உலகளவில் முக்கியமான பொழுதுபோக்கு நிறுவனமாகவும் டி- சீரிஸ் திகழ்கிறது. யூடியூப் தளத்தில் அதிகளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள டி-சீரிஸ் உலகின் முன்னணி சேனல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பல பில்லியன் பார்வைகளையும், இந்தி திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள், சுயாதீன இசை மற்றும் பிராந்திய இசைப் படைப்புகள் என விரிவான இசைத் தொகுப்பையும் கொண்டுள்ளது. இசை மற்றும் திரைப்படத் துறையில் பல முன்னணி திறமைகளை அறிமுகப்படுத்தியுள்ள டி-சீரிஸ், இந்திய இசை உலகில் தொடர்ந்து புதிய டிரெண்ட் உருவாக்கி, புதுமையான இசை அனுபவத்தையும் கொடுத்து வருகிறது. காலத்தால் அழியாத மெட்டுகளையும், புதிய திறமைகளின் படைப்புகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுடன் இணையும் இசைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Previous Post

தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

Next Post

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

Next Post

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் இயக்கி, நடிக்கும் டார்க் ஹியூமர் கதையான ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.