• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘ ஏப்ரலில் 3 -ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘ !

by Tamil2daynews
February 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘ஏப்ரலில் 3 -ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘ !

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!

மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர்  திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக்   கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை  வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.

இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது,

“இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது.

இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி,  ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு  இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்

எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி  பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .

இதன் படப்பிடிப்பு வண்டிபெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவாலான பகுதிகளில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது ” இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.
Previous Post

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Next Post

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

Next Post

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.