• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

by Tamil2daynews
February 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர்  நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும்  இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல, எந்த மாதிரியான காதல் கதை என்பதே புரியாத வகையில் பல ஆச்சரியங்களைத் தரும் படமாக ‘காதல் ரீசெட் ரிபீட்’ இருக்கும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.
இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் காதலும் உணர்ச்சியும் கலந்த இசை ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார், ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த், சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் கவனித்துள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டீசர் தற்போது இணையம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மார்ச் 6  அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிடிரைலர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Previous Post

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘ ஏப்ரலில் 3 -ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘ !

Next Post

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான ‘நாகபந்தம் ‘ (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

Next Post

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான 'நாகபந்தம் ' (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.