• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏப்ரல் 14 முதல் ரசிகர்களை மயக்க வருகிறது “ரிப்பப்பரி” !!

by Tamil2daynews
April 6, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏப்ரல் 14 முதல் ரசிகர்களை மயக்க வருகிறது “ரிப்பப்பரி” !!

 

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில்  இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க,  மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. தமிழ் சினிமாவின் முன்னணி திரைப் பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்தின்  டீசர்,  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் குட்டி பவானியாக கலக்கிய மகேந்திரன் இப்படத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டதிலிருந்தே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இசை ரசிகர்களின் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது.
கிராம பின்னணியில் யூடுயூப் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பற்றியது தான் இப்படத்தின் கதை. 6 முதல் 60 வயது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி டிராமா கலந்த, அசத்தலான ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. முக்கியமாக ஒரே வீட்டுக்குள் நடக்கிற  வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதையில் நிறைய திருப்பங்களுடன் ரசிகர்களை அசத்த வருகிறது “ரிப்பப்பரி”  திரைப்படம். தற்போது வெளியாகியுள்ள டீசர் இதை உறுதி செய்வதாக உள்ளது. அதிலும் குரங்கு பொம்மை டீசரிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதோடு, படத்தின் மீதான ஆவலை தூண்டுகிறது.

மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில்  இயக்குநர் Na. அருண் கார்த்திக் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

ஏப்ரல் 14 ஆம் தேதி உலகமெங்கும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “ரிப்பப்பரி” திரைப்படம்.

Previous Post

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் உடன் வைரல் ஆகி வருகிறது

Next Post

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக் குழு

Next Post

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு

Popular News

  • பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.