காதலர்களின் ஆபத்தை சொல்லும் ” இன்னும் ஒரு காதல் பயணம் “
” காதலின் பொன்வீதியில் , பூவினும் மெல்லிய பூங்கொடியான அவள் அவன்தான் என் கணவன் என மனதில் காதல் கோட்டை கட்டி, மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க அவனை காதலித்தாள். இதன் அடுத்தகட்டம் என்ன தெரியுமா? மனம் கவர்ந்த காதலர்கள் தனிமையில் சந்தித்து தங்களது அன்பை பரிமாறுவதுதான். அப்படி ஒருநாள் நாயகனும் , நாயகியும் சந்தித்தபொழுது தான் இடி என அந்த விபரீதம் நிகழ்ந்தது.
அந்த விபரீதத்தால் நடந்தது என்ன? மனம் ஒன்றுபட்ட காதலர்கள் தனிமையில் இனிமை காண செல்லும் பொழுது அதுவும் தொடைக்கானலில் காதலர்களுக்கு வரும் ஆபத்துகளை வரிசைபடுத்தி திரில்லாகவும், திகிலாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லும் படம் தான் “இன்னும் ஒரு காதல் பயணம்” என்று மட மட வென்று கூறினார் படத்தின் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார்.

வில்லனாக பாடலீஸ்வரன் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் காளையப்பன் பங்கேற்க, சார்லி, ஜி.பி.முத்து, ஜார்ஜ், சுவாமிநாதன், கும்கி அஸ்வின், மதன்பாப், ஜெய்ஆனந்த், கீர்த்தனா, தீபா, மகேந்திரன், காதல் அருண், தியா , மூர்த்தி என நிறையபேர் நடிக்கின்றனர்.
ஞான கரவேல் பாடல்களையும், எஸ்.ஐ. சந்தோஷ்குமார் ஒளிப்பதிவையும், கணேஷ்பாபு படத்தொகுப்பையும், வாரன் சார்லி இசையையும், ராதிகா, விமல் , லோகு மூவரும் நடன பயிற்சியையும், பாப்புலர் பாபு சண்டை பயிற்சியையும் கே.எம்.நந்தகுமார் கலையையும், மகேந்திரன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
“மதுரை மணிக்குறவர்” படத்தை காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த ஜி.காளையப்பன் அதே நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
புதியவரான ஆர்.டி. குஷால் குமார் ” இன்னும் ஒரு காதல் பயணம்” படத்தின் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.