• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்!

by Tamil2daynews
December 11, 2019
in சினிமா செய்திகள்
0
‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்!
4
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மிகத் தகுதியான பிரம்மச்சாரி என்றஅடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகு நாயகன் ஹரீஷ் கல்யாண்.

விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ்ப் பதிப்பில் ஜோடியாக நடிக்கின்றனர் ஹரீஷ் கல்யாண் பிரியா-பவானி சங்கர். ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சம்பிரதாயமான பூஜையுடன் சென்னையில் இன்று (டிசம்பர் 11) இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. துவக்க விழா பூஜையில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக் கலைஞர்கள் கலந்து கொணடனர். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி மற்றும் ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இப்படத்தை திரு.கொன்ரு சத்தியநாராயணா தயாரிக்கிறார். எஸ்.பி.சினிமாஸ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கிறது.


“வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்து போன்ற பரவசத்தையும், பரபரப்பையும் ஒரு சேரப் பெற்றது போலிருக்கிறது எனக்கு” என்று புன்னகையுடன் விவரிக்கும் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.

” ‘பெல்லி சூப்லு’ படத்தை முதன் முதலாக பார்த்தபோது, எவ்வளவு எளிமையான மற்றும ஆழமான படம் இது என்று நான் பிரமித்துப் போனேன். குழந்தைப் பருவம் முதலே எனக்கு மிக நெருக்கமான நண்பனான ஹரீஸ் கல்யாணுக்கு உடனே பாேன் செய்து ‘பெல்லி சூப்லு’ படத்தை தமிழில் எடுத்தால் அதற்கு மிகவும் மிகப் பொருத்தமான நடிகன் நீதான் என்று தெரிவித்தேன். இப்படி நான் சொன்னது உலகத்தின் காதுகளில் கேட்டுவிட்டதோ அல்லது வேறு என்ன வேடிக்கையோ தெரியவில்லை, இப்போது நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம்.

பிரியா பவானி சங்கரின் நடிப்பை பல படங்களில் பார்த்து ரசித்த எனக்கு, அவர் எந்த அளவுக்கு பரிபூரண நடிகை என்பது தெரியும். இப்படத்தில் கதாநாயகியாகியாக நடிக்கும் அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். முழுக்க முழுக்க இது உள்ளடக்கம் மற்றும் கதாபாத்திரங்களால் இயக்கப்படும் படம் என்பதால் இயற்கை சாராம்சம் மிக்க படமாக இது இருக்கும். இயற்கை சாராம்சம் மிக்க படம் என்று குறிப்பிடுவதால், நம் மண்ணின் மரபுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறோம். இயக்குநராக என் பயணத்தைத் தொடரக் காரணமாக இருந்த ஹரீஸ் கல்யாண் மற்றும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்  திரு.கொன்ரு சத்தியநாராயணாவுக்கும் தயாரிப்பில் உறுதுணையாக நிற்கும் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனத்துக்கும் என்றென்றும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் இயக்குநர் கார்த்திக் சுந்தர்  .

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, தயாரி்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறார் கோடலி முரளி கிருஷ்ணா. படத்தொகுப்பை கிருபா செய்ய, வசனங்களை தீபக் சுந்தர்ராஜன் எழுதுகிறார். கலை இயக்குநர் பொறுப்பை கே.சதீஷ் ஏற்க, ஆடை அலங்கார வடிவமைப்புகளை அனுஷா மீனாட்சி செய்ய, புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார் சூர்யா. நடிகர் நாசர் கிளாப் அடித்து வைத்து படப்பிடிப்பை துவங்கி வைக்க , நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி ப்ரியா பவானி ஷங்கர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்தப் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக திரைக்கு வருகிறது.

Tags: “Pelli Choopulu”Harish KalyanKaarthikk SundarPriya Bhavanishankar
Previous Post

Actor Sathish – Sindhu Wedding Stills

Next Post

‘ராட்சசன்’ படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்!

Next Post
‘ராட்சசன்’ படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்!

'ராட்சசன்' படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்!

Popular News

  • படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மெட்ராஸ் மேட்னி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

June 16, 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

June 16, 2025

படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

June 16, 2025

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 14, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.