• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனி ஸ்டாண்ட் மற்றும் பிரத்யேக ஆப் – ஹரிஷ் கல்யாண் கொடுத்த வாக்குறுதி

ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனி ஸ்டாண்ட் மற்றும் பிரதேச வடிவமைத்து தருவேன் என இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் வாக்குறுதி அளித்துள்ளார்.

by Tamil2daynews
December 3, 2021
in Uncategorized, சினிமா
0
ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனி ஸ்டாண்ட் மற்றும் பிரத்யேக ஆப் – ஹரிஷ் கல்யாண் கொடுத்த வாக்குறுதி
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமாவில் இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் பிடி செல்வகுமார். தளபதி விஜய் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய இவர் விஜயின் இன்றைய அபரீத வளர்ச்சிக்கு முக்கியமான நபர்களில் ஒருவராக இருந்தவர். சினிமா துறையை தாண்டி கலப்பை மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். மேலும் மூலிகை மலையில் தியான மண்டபம் கட்டிக் கொடுத்தார், மழை இல்லாமல் தவித்த போது மழை வேண்டி பூஜைகள் உள்ளிட்டவைகளை நடத்தினார்‌. மேலும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வேலை இழந்து தவித்த ஆட்டோ ஓட்டும் பெண்கள் 150 பேருக்கு அரிசி மூட்டைகளை வழங்கி உதவி செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹரிஷ் கல்யாண் பங்கேற்று கலப்பை மக்கள் இயக்கத்துடன் இணைந்து ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு உதவி செய்தார்.  ‌‌

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசும்போது கலப்பை மக்கள் இயக்கம் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதனைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் இணைந்து நானும் செயலாற்றுவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனி ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் அவர்களுக்கான பிரத்யேக மொபைல் ஆப் உள்ளிட்டவைகளை வடிவமைத்து தர பிடி செல்வகுமார் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கலப்பை மக்கள் இயக்கத்தலைவர் பிடி செல்வகுமார் அவர்கள் பேசியதாவது இந்த இயக்கத்தின் மூலமாக வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டி இன்றைய சமுதாயத்தில் போராளிகளாக வாழ்ந்துவரும் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு அரிசி மூட்டை வழங்கி உதவியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடன் இணைந்து இந்த விழாவில் கலந்துகொண்டு உதவிய ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கு நன்றி என பேசினார். வறுமையில் வாடும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டும் பெண்கள் சங்கத்தின் தலைவி மீனாட்சி அவர்கள் எங்களையும் எங்களது கஷ்டங்களையும் புரிந்து கொண்டு எங்களுக்கு அரிசி முட்டை வழங்கிய ஹரிஷ் கல்யாண் மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தலைவர் பிடி செல்வகுமார் அவர்களுக்கு நன்றி என மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டார். எங்களுக்கு என தனி ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பிரத்தியேக மொபைல் ஆப் ஆகிவற்றை வடிவமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த ஹரிஷ் கல்யாணுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வி கே வெங்கடேசன், மக்கள் தொடர்பாளர் ராஜ்குமார், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்

Next Post

சூப்பர் ஹீரோ திரைப்படமான, “மின்னல் முரளி” படத்தின் போனஸ் டிரெய்லரை வெளியிட்டு, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது NETFLIX நிறுவனம் !

Next Post
சூப்பர் ஹீரோ திரைப்படமான, “மின்னல் முரளி” படத்தின்  போனஸ் டிரெய்லரை வெளியிட்டு,  ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது  NETFLIX நிறுவனம் !

சூப்பர் ஹீரோ திரைப்படமான, “மின்னல் முரளி” படத்தின் போனஸ் டிரெய்லரை வெளியிட்டு, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது NETFLIX நிறுவனம் !

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.