மும்பை, XX நவம்பர், 2021: சூப்பர் ஹீரோ பிரபஞ்சத்தை நம் கண்ணுக்கு காட்டும், மின்னல் முரளி படத்தின் போனஸ் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது NETFLIX நிறுவனம். Netflix இல் வரவிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படம், நாடு முழுவதும் பல சாதனைகளை படைத்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறது. மின்னல் சக்தி, ஒரு காவியதன்மை மிக்க கதை மற்றும் நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கான போர், என இன்று வெளியிடப்பட்ட டிரெய்லர் பலவிதமான உணர்ச்சிகளைத் தூண்டி பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மிகச்சிறபான கொண்டாட்டமாக, இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து திரையிடப்படவுள்ளது.

சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் ‘மின்னல் முரளி’ எனும் சக்திகள் மிகுந்த அதிசய மனிதனாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். இவருடன் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் Weekend Blockbusters (ஷோபியா பால்) தயாரித்து, பாசில் ஜோசப் இயக்கியுள்ள, இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் Netflix தளத்தில் பரத்யேகமாக வெளியாகிறது.
பட டிரெய்லர் குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது..
“டிரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இத்திரைப்படத்தின் உலகம் குறித்து எங்கள் ரசிகர்கள் அறிந்துகொள்ள, இந்த போனஸ் டிரெய்லர் மூலம் படத்தில் என்ன வரப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவை தர படத்தின் ஸ்னீக் பீக்கைப் பகிர முடிவு செய்தோம். ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதும், படத்தின் மூலம் அவர்களை மகிழ்விப்பதும்தான் எங்களின் முக்கிய முயற்சி. போனஸ் டிரெய்லரின் மூலம், படத்தைப் பார்ப்பதில் ரசிகர்களின் ஆர்வம் பலமடங்கு பெருகுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

டிசம்பர் 24, 2021 அன்று மின்னல் முரளி திரைப்படம் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு போரின் பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
இயக்குநர்
பாசில் ஜோசப்
நடிகர்கள்
டொவினோ தாமஸ்
குரு சோமசுந்தரம்
ஹரிஶ்ரீ அசோகன்
அஜு வர்கீஸ்
எழுத்து , திரைக்கதை, வசனம்
அருண் A.R, ஜஸ்டின் மேத்திவ்ஸ்
பாடல்கள்
மனு மஞ்சித்
இசை
ஷான் ரஹ்மான்