• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சமூகத்தின் ஏற்ற தாழ்வு பார்வையை கிழித்தெறியும், “பேரன்பும் பெருங்கோபமும்” !!

by Tamil2daynews
April 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சமூகத்தின் ஏற்ற தாழ்வு பார்வையை கிழித்தெறியும், “பேரன்பும் பெருங்கோபமும்” !!

 

VAU MEDIA ENTERTAINMENT-ன் தயாரிப்பாளர் துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா மாணவர், அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் “பேரன்பும் பெருங்கோபமும்”.
இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக உருவாகி வருகிறது இப்படம்.
“பரியேறும் பெருமாள்”, “அசுரன்” என சமத்துவம் பேசும் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளின் வரிசையில், செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும்,  மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே  உண்மையான சமத்துவ மனிதன். வெரும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன் .இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த திரைப்படம்.
இரு குழந்தைகளை காணவில்லை என ஆரம்பிக்கும் விசாரணை, பல அதிர்ச்சியான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்து செல்கிறது.  1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடக்கிறது.  இதற்காக படக்குழு  அக்காலத்திய படங்கள் பத்திரிகை செய்திகளை ஆராய்ந்து, கடும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, நேரடி லொகேஷன்களில் தத்ரூபமாக அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வருகிறார்கள்.
இப்படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். 20, 23 மற்றும் 46 வயது உள்ளவராக தோன்றுகிறார். மூன்று காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கடும் பயிற்சி எடுத்து,  உடல் எடையை கூட்டி, மீண்டும் குறைத்து இப்படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
பல படங்களில் நடித்த பிறகுதான் இந்த மாதிரி பெரிய ரிஸ்காக உடல் எடையை குறைப்பது.. கூட்டுவது என  முன்னணி நடிகர்கள் செய்வது வழக்கம். அதை புது முகமாகவே உற்சாகத்தோடு.. தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும்.. படபிடிப்பில் கைதட்டல் பெறுகிறார்,நாயகன்.
நாயகன் மட்டுமல்லாது இப்படத்தின் நாயகி மற்றும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே மூன்று காலகட்டங்களில் மூன்று வித தோற்றங்களில் நடிக்கிறார்.
நாயகியாக, செங்கலம் வெப் சீரிஸ்’ல்
நாச்சியாராக நடித்து  பலரது பாராட்டுகளை  வாங்கிய ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார்.
விஜித், ஷாலி நிவேகாஸ் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, MIME கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இத் திரைபடத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். சூப்பர் கிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் #விடுதலை படத்திற்கு பிறகு இந்தத் திரைப்படத்தை ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் பாலுமகேந்திரா உதவியாளர். இப்படத்தை இயக்கிவரும் சிவபிரகாஷ், பாலு மகேந்திராவின் சினிமா பட்டறை மாணவர். பாலு மகேந்திராவின் இந்த இரு இயக்குனர்களுக்கு இளையராஜா இசை அமைப்பது  குறிப்பிடத்தக்கது.
‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த JB தினேஷ் குமார் ஒளிப்பதிவு  செய்துள்ளார்.
ராமர், படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் ‘அசுரன்’, ‘விடுதலை’ போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தரமான படைப்புகளை தந்து வரும், VAU MEDIA ENTERTAINMENT-சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்துவருகிறார்.
Previous Post

பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்

Next Post

கொரோனாவை வீழ்த்தும் ‘லோக்கல் சரக்கு’! – விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது

Next Post

கொரோனாவை வீழ்த்தும் ‘லோக்கல் சரக்கு’! - விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.