ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ‘இறைவன்’..!
சிறந்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய படங்களுக்காக இணையும் போது நிச்சயம் அது பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பான்-இந்திய நடிகர் ஜெயம் ரவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் ஐ.அகமது ஆகியோர் முதன்முறையாக ’இறைவன்’ படத்திற்காக இணைந்துள்ளனர். தங்கள் சரியான திட்டமிடல் மற்றும் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வந்த படக்குழு, இப்போது தங்கள் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு இந்திய மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. ‘என்றென்றும் புன்னகை’, ’மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அகமது இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் பணியாற்றுவதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவியின் நட்சத்திர மதிப்பு பான் இந்தியா அளவில் உயர்ந்துள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு அனைத்து பகுதிகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், மொழிகள் தாண்டி இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி போன்ற திறமையான நடிகர்களை உள்ளடக்கியுள்ளதால், உலகளவில் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
*நடிகர்கள்*: ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள், பக்ஸ் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
தயாரிப்பாளர்: சுதன் சுந்தரம் & ஜெயராம் .ஜி,
எழுதி இயக்கியவர்: ஐ. அகமது,
இசை: யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: ஹரி.கே.வேதாந்த்,
எடிட்டர்: மணிகண்ட பாலாஜி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஜாக்கி,
சண்டைப் பயிற்சி: டான் அசோக்,
காஸ்ட்யூம்: அனு வர்தன் (நயன்தாரா), பிரியா கரன் & பிரியா ஹரி,
விளம்பர வடிவமைப்பு: கோபி பிரசன்னா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா டி’ஒன்