• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் பெருமையான படைப்பு இரவின் நிழல்..!

by Tamil2daynews
June 12, 2022
in சினிமா செய்திகள்
0
இந்த முறை ஆஸ்கரை வெல்ல வேண்டும்.  புதுமைப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் பெருமையான படைப்பு இரவின் நிழல்..!

BIOSCOPE USA மற்றும் AKIRA PRODUCTIONS தயாரித்த இத்திரைப்படத்தின் – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – இராதாகிருஷ்னண் பார்த்திபன். மீண்டும் ஒரு அசாதாரணமான முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் பார்த்திபன். உலகின் முதல்’ NON-LINEAR SINGLE SHOT MOVIE’ என்ற பெருமையுடன், தமிழ் திரை உலகுக்கே உலக அரங்கில் பெருமை சேர்க்கப் போகும் திரைப்படம் இந்த “இரவின் நிழல்” – ஆம் !

திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த படைப்பாளிகள் பலரும் பரவசமாய், நெகிழ்ச்சியாய் பகிர்ந்தது இத்தகவலே!

இப்படத்தின் இசை வெளியீடு ஜுன் 5 – 2022, IIT Madras Research Park- சென்னை -யில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கூடுதல் சிறப்பாய்  “ரோஜா முதல் இரவின் நிழல்” வரையிலான இசைப்புயல் A R ரஹ்மான் அவர்களின் இசைப்பயணத்திற்கான கொண்டாட்ட விழா, ஒரு திருவிழா போல நடைபெற்றது. (MUSICAL JOURNEY OF A.R.RAMAN)

ஒரு இசைவெளியீடு _ பாராட்டு விழா எப்படி இருக்குமோ அப்படி இந்த நிகழ்ச்சி நிச்சயம் இருக்காது! பார்த்திபன் எப்படியும் நம்மை ஆச்சர்யப்படுத்துவார் என்று நம்பிக்கையில்தான் சென்றோம் .ஆனால் நாம் நினைத்ததை விட 10 மடங்கு ஆச்சர்யத்தை உண்டாக்கிவிட்டார் மனிதர்! ஆம்…தனது படைப்பு மாத்திரமல்ல, ஒரு நிகழ்ச்சியைக்கூட வித்தியாசத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல நிச்சயமாய் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபனே! தனது போட்டியாளராய் தன்னையே நினைப்பதால், அடுத்தடுத்து சிகரம் தொடுகிறார் பார்த்திபன்.

‘Musical journey of A.R.Rahman’ என்ற கலைமிகு நுழைவாயில் நமை வரவேற்க… பியானோ வடிவிலான கருப்பு – வெள்ளைக் கட்டைகளின் வளைவுகளுக்கிடையே நாம் பயனிக்க, மரப்பலகைகளில் வரைந்த ஓவியம் மனதில் இசைக்க, எதிரே Press – க்கான பார்த்திபன் ஸ்டைல் மேசையில் press – Red Carpet Interview.

அதை கடந்து Lift-இன் நுழைவு வாயிலில்
Name boardS
ஒரு புறம்
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
IN
மற்றொருபுறம்
A R ரஹ்மான்
IN
வழக்கமான IN & OUT பலகை என IN-ஐ தள்ளிப்பார்த்தால் மறுபுறமும் “ IN “
A.R.ரஹ்மான், பார்த்திபன் இருவரும் நமை மகிழ்விக்க  உள்ளே உள்ளனர் என்பதை வெளியே தெரிவித்ததுடன்,  IRAVIN NIZHAL-ன்  சுருக்கம்  “IN” – என தனது “உள்ளே – வெளியே” ஆட்டத்தை ஆரம்பித்தார் பார்த்திபன்.
LIFTற்குள் செல்லும் வழியில் இரவின் நிழலின் STENSIL-ன் பின்புறம் ஒளி பீய்ச்ச …
நிழலாய் வருபவர்களின் மேல் படரும் ஒளி – அழகு!
LIFT-ற்குள் ஏறினால்
“LIFTING YOUR TASTE OF CINEMA” என LIFT-ற்குள் நிகழ்ச்சியின் நாயகன்
A R ரஹ்மான் மற்றும் இரவின் நிழலின் POSTERS!
LIFTஐத்  திறந்தால்
1000 இசைக்கருவிகள் இருபுறமும் வரிசையாய் வரவேற்க – நடுவில் நாம்!
அடடே…அற்புதம்!
BYTE BOOTH
வழியில் இரண்டு BYTE BOOTH. பேசுபவர்களுக்கு FRAME வைக்காமல் பேசுபவரே ஒரு FRAME-ற்க்குள் அமரும்படியான அட்டகாசமான செட்டப்.
அரங்கிற்குள் நுழைந்ததும் இமைகள் இமைக்க மறந்தன அரங்கைக் கண்டதும்,ஆளுயர அழகான சிற்பங்கள் இசைக்கருவியை வாசிப்பது போல் ஆங்காங்கே FRAME-இல் அமர்ந்தபடி தொங்கிக் கொண்டிருக்க, அருகில் EMPTY FRAMES – தொங்கவிட்டிருந்தது – கவிதை!
எல்லா நிகழ்ச்சிகளிளும் தொகுப்பாளர் ஒரு புறமிருக்க, பார்வையாளர்களின் பார்வை யாவும் ஒரு புறமாய் குவியும்.  ஆனால் இயக்குனர்  திரு. கரு பழனியப்பன் நிகழ்ச்சியைத் துவங்க, திடீரென இட வலமாய் அவர் நகர்ந்தார் – நடக்காமல் ! YES. ட்ராக் அண்ட் ட்ராலியில் பார்வையாளர்கள் யாவரும் திரும்பிப்பார்க்காமல் அவரவர் பார்வைக்கு நேரே! கரு பழனியப்பன் மற்றும் R J சிவசங்கரி தொகுத்தது அழகு! பாடகர்கள், இசையமைப்பாளர்கள், GV பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன், மற்றும் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, கலைப்புலி எஸ் தாணு, இப்படி வந்த விருந்தினர்கள் பலரும்  நகரும் மேடையில் பேச, நாம் நகராமல் பார்த்துக் கொண்டிருந்தோம். பார்த்திபன் டச்..!
ஒரே மேடை 3 விதமாய் மாற்றம்… எப்படி சாத்தியம்? திரை மூடி திறக்கும் போதெல்லாம் வெவ்வேறு வித்தியாசமான அரங்க அமைப்புகள். அட்டகாசம் பார்த்திபன்!
ட்ரம்ஸ் சிவமணி, வழக்கம் போல் அதிரவைக்க அரங்கத்தில் கை தட்டல் மூலம் சிவமணிக்கு ரசிகர்கள் ஈடு கொடுத்தனர்.
அத்துணை இசைக் கலைஞர்களும் ரஹ்மானின் புகழ்மிகு பாடல்களை இசைத்துப் பாடி நமை மயக்கிக்  கொண்டிருக்க, புயலாய் வந்தார் A R ரஹ்மான்- ரோஜா  பூக்களுக்கு நடுவே! இசையையும் , பாராட்டுகளையும் அமைதியான புன்னகையுடன்  ரசித்துக் கொண்டிருந்தார்.  நிகழ்ச்சியின் ஒவ்வொரு அசைவிலும் பார்த்திபனின் மெனக்கெடல் அபாரம். உடன் உழைத்த கலைஞர்களுக்கும் பாராட்டுகள்! இசை வெளியீட்டை இந்தி சூப்பர் ஆக்டர் அபிஷேக் பச்சன் வெளியிட்டது சிறப்பு! இவர்தான் பார்த்திபன் HINDI_யில் இயக்கிய SSS7 (ஒத்த செருப்பு REMAKE) படத்தின்  நாயகன். நிகழ்ச்சியில் ஒவ்வொரு நிகழ்வும் அபாரம்.
இம்முறை மைக்கால் டென்ஷன் இல்லாமல் பலரும் மைக்கை வைத்து காமெடி செய்தது ஹைக்கு சிரிப்பு!
முத்தாய்ப்பாய்… Musical Journey of Mozart of Madras என்ற தனித்துவமான மேடையில் Mozart of Madras A R ரஹ்மானின் கந்தர்வ இசையில் “இரவின் நிழல் “ படத்தின் பாடல்கள் இசைக்கப்பட…
இசை மற்றும் படத்தின் வீர்யம் தெரிந்தது …புரிந்தது!
உயிரை உருக்கும்… உறைய வைக்கும் இசை!
நிச்சயம் உலகம் வியக்கும்படியான படைப்பாகும் இரவின் நிழல்!  நம்புவோம்!
பார்த்திபனின் தங்கம் பதித்த பியானோ பரிசை ரஹ்மான் பரவசத்துடன் பெற, படக்குழுவினர் யாவருக்கும்  ரஹ்மான் கையால் கிரீடமாய் தொப்பி வைக்கப்பட்டது!
மொத்த நிகழ்ச்சியே ஹைலைட்தான் அதிலும் ஹைலைட்,
பார்த்திபன் கேள்விகள் கேட்க, ரஹ்மான் இசையால் பதிலளித்தது…!
புதுமையின் புதுமை!
GREAT SHOW !
நிகழ்ச்சி விரைவில் STAR VIJAY-யில் வரவிருக்கிறது!
MUST WATCH !.
இரவின் நிழலும் திரைக்கு வர தயாராக இருக்கிறது!
நம் தமிழ்க்  கலைஞனைக் கௌரவிக்க உலகம்  காத்துக் கொண்டிருக்கிறது!
வாழ்த்துகள் பார்த்திபன்!
Previous Post

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு இன்று நடைபெற்றது !

Next Post

பூமி அறக்கட்டளை நடத்தும் Bhumi campus awards 2022….

Next Post
இந்த முறை ஆஸ்கரை வெல்ல வேண்டும்.  புதுமைப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.

பூமி அறக்கட்டளை நடத்தும் Bhumi campus awards 2022....

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.