IIFC -International Institute of Film and Culture – சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்.இயக்குனர் வெற்றி மாறன் (President, IIFC ), ராஜநாயகம் (Mentor, IIFC ) , வெற்றி துரைசாமி ( Secretary, IIFC )ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021 இல் தமிழ்ப்புத்தாண்டு அன்று தொடங்கப்பட்டது .
இணையத்தளம் : https://www.iifcinstitute.com/
5 சுற்று சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, சுற்று 2 (எழுத்து தேர்வு) தமிழகம் முழுவதும் 5 இடங்களில் நடத்தப்படுகிறது .
•சென்னை
•திருச்சி
•மதுரை
•திருப்பூர்
•திருநெல்வேலி
IIFC அதன் முதுகலை பட்டயப்படிப்பில் முதல் பேட்ஜ் 40 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி காலம் 1 வருடம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி, தங்குமிடம் மற்றும் உணவுக்காக 100% மானியங்களைப் பெறுவார்கள்.
எனவே, மொத்தம் 1450 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கிறார்கள் . தேர்வின் காலம் 3 மணி நேரம் (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை).



