• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

by Tamil2daynews
January 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

 

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’  வெற்றிப்படமாக மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டமான விஷுவல் கிளிம்ப்ஸை பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் பிரம்மாண்டமான மாயாஜால காட்சிகள், நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும் என்பதை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “’மரகத நாணயம் 2’ தயாரிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  முதல் பாகத்தின் தீவிர ரசிகன் என்பதால் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமானது. இந்தமுறை உலகளவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் பல திறமையான நடிகர்களுடன் மிகப் பெரிய அளவில் முழுமையான அல்டிமேட் என்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது” என்றார்.
‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை ARK சரவண் இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் & K V துரை ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, RDC மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் கீழ் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர்கள்: இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
இயக்கம் – ARK சரவண்,
இசை – திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,
கலை இயக்கம் – என்.கே. ராகுல்,
படத்தொகுப்பு – திருமலை ராஜன் R,
வசனம் – ராஜேஷ் கண்ணன்,
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,
உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,
நடன அமைப்பு – ரகு தாபா,
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் P,
தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,
ஒலி கலவை – உதயகுமார்,
VFX – ரெசோல் FX,
VFX மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,
மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,
மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,
பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,
சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

Previous Post

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு

Next Post

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

Next Post

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..?

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.