• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன்வைரமுத்துவின் அம்பறாத்தூணி 

by Tamil2daynews
October 3, 2020
in Uncategorized
0
இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன்வைரமுத்துவின் அம்பறாத்தூணி 
0
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலை பதிப்பித்திருக்கிறது.
அம்பறாத்தூணி குறித்து நூலின் ஆசிரியர் கபிலன்வைரமுத்து கூறுயிருப்பாதாவது:
அன்பு, கனவு, கேள்வி, மீட்சி கொண்டு இச்சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். என் சக தலைமுறையோடும் என்னிலும் இளையவர்களோடும் நான் பகிர்ந்துகொள்ள நினைத்த செய்திகளையும் உணர்வுகளையும் சிறுகதை அம்புகளாக வடித்திருக்கிறேன். தொற்று நோய், மன அழுத்தம், பொருளாதார வீழ்ச்சி என கடும் சவால்கள் நிறைந்த இச்சூழலில் இந்த புத்தகத்தில் இருக்கும் மனிதர்கள் நம் சமூகத்திற்கு சிறுதுளியேனும் உற்சாகமும் தோழமையும் தருவார்கள் என நம்புகிறேன்.
நூல் குறித்து பதிப்பாளர் மு.வேடியப்பன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
“கபிலன்வைரமுத்து புதிய எழுதுகளங்களுக்கானத் தேடல் கொண்ட பன்முகப் படைப்பாளர். கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், திரைக்கதை, வசனம், பாடல்கள் என மொழியின் அனைத்து வடிவங்களிலும் இயங்குபவர். அம்பறாத்தூணி கபிலன்வைரமுத்துவின் பதினோராவது புத்தகம். இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பதினைந்து கதைகளும் பதினைந்து அனுபவங்கள். வேலூர் சிப்பாய் புரட்சி, பூலித்தேவன் ராணுவ முகாம், நவீனகாலத்து ஆழ்கடல் சுரங்கம், டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என்று பல்வேறு நிகழ்வுகளை கதைகள் வழி பேசியிருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என்று வெவ்வேறு காலகட்டங்களில் இந்த கதைகள் நிகழ்கின்றன. இது பழமையை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கும் புதுமை இலக்கியம். கபிலன்வைரமுத்துவோடு டிஸ்கவரி புக் பேலஸ் இணைவதில் பெருமை கொள்கிறது”  என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கவண் படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான கபிலன்வைரமுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் எழுத்தாளராகவும் பாடலாசிரியாகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்த கோமாளி திரைப்படத்தில் கபிலன்வைரமுத்து எழுதிய ஒளியும் ஒலியும் பாடல் எளிமையான மொழியில் பல்வேறு கால மாற்றங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளை மையமாக வைத்து 2018-ஆம் ஆண்டு கபிலன்வைரமுத்து ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ என்ற தனிப்பாடலை தன்னுடைய தயாரிப்பில் உருவாக்கியிருக்கிறார். இதை இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கல்லூரி நாட்களில் தன் நண்பர்களோடு சேர்ந்து மேற்கொண்ட  சமூகப்பணிகளை ஒரு அனுபவ ஆவணமாகத் தொகுத்து ‘இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற பெயரில் யூ-டியூபில் வெளியிட்டிருக்கிறார். கபிலன்வைரமுத்து தற்போது இந்தியன்2, தள்ளிப்போகாதே, ஆலம்பனா, சின்ட்ரெல்லா, நாநா உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
Previous Post

அவள் அப்படித்தான் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது

Next Post

“ராக்கெட்ரி” படத்திற்காக இசையமைப்பாளர் சாம் CS  இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் இசை ! 

Next Post
“ராக்கெட்ரி” படத்திற்காக இசையமைப்பாளர் சாம் CS  இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் இசை ! 

“ராக்கெட்ரி" படத்திற்காக இசையமைப்பாளர் சாம் CS  இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் இசை ! 

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.